உலகம்

‘என் அனுமதி இல்லாமல் என்னை பெற்றெடுத்திருக்கிறார்கள்’: பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்த பெண்!

அமெரிக்காவின் நியூஜெர்சியைச் சேர்ந்த பெண் தியாஸ். சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்படும் இவர், தன் அனுமதியின்றி தன்னைப் பெற்றெடுத்ததற்காக அவரது பெற்றோர் மீது வழக்குத் தொடுத்திருக்கிறார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பாகியிருக்கிறது.

இந்த வழக்கு தொடர்பாக ஒரு வீடியோவில் பேசிய தியாஸ், “நான் உண்மையில் இங்கு இருக்க விரும்புகிறேனா என்று நான் பிறப்பதற்கு முன்பு என் பெற்றோர் எப்படியும் என்னை தொடர்புகொண்டு கேட்டிருக்க வேண்டும். அதற்காக முயற்சித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் முயற்சிக்கவில்லை.

எனது விருப்பத்திற்கு எதிராக என்னை பெற்ற பெற்றோருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருக்கிறேன். என்னுடைய குழந்தைகளை நான் கருத்தரித்து பெற்றெடுக்கவில்லை. அவர்களை நான் தத்தெடுத்திருக்கிறேன். அவர்கள் இங்கே இருப்பது என் தவறல்ல. ஒரு நல்ல மனிதனாக இருக்கவும் அவர்களுக்கு உதவவும் முயற்சிக்கிறேன். நீங்கள் இப்போது கர்ப்பமாக இருந்தால், ஒரு மனநல மருத்துவரை சந்தித்து, அந்த குழந்தைகள் உண்மையில் இங்கே பிறக்க விரும்புகிறார்களா என்று கேட்க வேண்டும். என்னிடம் அப்படி கேட்காததால் என் பெற்றோர் மீது நான் வழக்கு தொடர்ந்தேன்.

என்னை கருத்தரிக்க பங்களித்து, என்னைப் பெற்றெடுத்த என் அம்மாவால்தான் நான் இங்கே இருக்கிறேன். குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோருக்கு எதிராக வழக்குத் தொடர கற்றுக்கொடுப்பதை எனது வாழ்க்கைப் பணியாக செய்கிறேன். எனவே, விருப்பமில்லாத இடத்தில் வேலை செய்து சம்பாதிக்க வேண்டிய அவசியம் இனி குழந்தைகளுக்கு இருக்காது.” எனப் பேசியிருக்கிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தைவான் பாராளுமன்றத்துக்குள் களேபரம்!

Pagetamil

‘1000 இற்கும் அதிக ஹமாஸ் போராளிகள் எங்கள் நாட்டில் சிகிச்சை பெறுகிறார்கள்’: துருக்கி ஜனாதிபதி

Pagetamil

லைசன்ஸ் கேட்ட பொலிஸ்காரருக்கு சட்டையை இறக்கி காண்பித்த இளம்பெண்!

Pagetamil

‘உக்ரைனுக்காக போரிட மேற்குலகம் விரும்பினால் நாங்களும் ரெடி’: ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

Pagetamil

பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டவர் மரணம்!

Pagetamil

Leave a Comment