விளையாட்டு

சென்னையை வீழ்த்தியது குஜராத்

ஐபிஎல் ரி20 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 232 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது.

232 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரஹானே, ரச்சின் ரவீந்திரா தலா ஒரு ரன்னும், கேப்டன் கெய்க்வாட் பூஜ்ஜியம் எடுத்து விக்கெட்டை இழந்தனர். ரொப் ஓர்டர் சரியாக அமையாத நிலையில் டேரில் மிட்சேல் மற்றும் மொயீன் அலி இணைந்து ரொப் ஓர்டர் இழப்பை சரி செய்தனர். 10 ரன்களில் தொடங்கிய இவர்கள் கூட்டணி 119 ரன்கள் வரை நீடித்தது..

பின்னர் இருவரும் அரைசதம் அடித்தனர். டேரில் மிட்சேல் 63 ரன்களும், மொயீன் அலிக்கு 56 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பின் வந்தவர்களில் யாரும் பெரிய இன்னிங்ஸ் விளையாடவில்லை. கடைசி ஓவர்களில் எம்எஸ் தோனி சிக்ஸர்களை விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். எனினும் வெற்றி இலக்கு அதிகம் என்பதால் சென்னை அணியின் தோல்வி உறுதியானது. 20 ஓவர்களில் சென்னை அணி 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

குஜராத் தரப்பில் அதிகபட்சமாக மோஹித் சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

லக்னோவை டெல்லி வீழ்த்தியதன் விளைவு: சிஎஸ்கே, ஆர்சிபி அணியின் பிளே ஓஃப் நிலை என்ன?

Pagetamil

கே.எல்.ராகுலுக்கு விருந்து வைத்த லக்னோ அணி உரிமையாளர்

Pagetamil

டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த ஆண்டர்சன்

Pagetamil

பிஎஸ்ஜி அணியில் இருந்து வெளியேறுவதாக எம்பாப்பே அறிவிப்பு!

Pagetamil

“நீங்கள் செங்கோட்டையில் கொடி ஏற்றவில்லை சஞ்சீவ் கோயங்கா!” – ஷமி ஆவேசம்

Pagetamil

Leave a Comment