மலையகம்

சந்தியாகுமாரியின் உயிரைப்பறித்த தயிர் வண்டி!

தம்புள்ளையில், திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிய குழுவினரை ஏற்றிச் சென்ற கெப் மற்றும் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒன்பது பேர் காயமடைந்து தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சீகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹபரணை, ஹிரிவடுன்ன பிரதேசத்தை சேர்ந்த சந்தியா குமாரி என்ற 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் பலத்த காயமடைந்த மூன்று வயது சிறுமி கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தம்புள்ளை ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.

தம்புள்ளை இனாமலுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஹிரிவடுன்ன பகுதிக்கு சென்ற உறவினர்கள் பயணித்த கப் வண்டியும், ஹபரணையிலிருந்து தம்புள்ளை நோக்கி தயிர் ஏற்றிச் சென்ற லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சீகிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காலணி வர்த்தகரின் வீட்டில் கொள்ளையடித்த பொலிசார் கைது

Pagetamil

‘தும்பர சம்பவம் பெருந்தோட்ட நிர்வாகங்களின் அடாவடித்தனத்தின் இறுதியாக அமைய வேண்டும்’: ரூபன் பெருமாள் எச்சரிக்கை!

Pagetamil

பேருந்தை செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி!

Pagetamil

மாடியிலிருந்து விழுந்த பெண் மரணம்!

Pagetamil

பரீட்சைக்கு வந்த 2 மாணவிகள் மாயம்!

Pagetamil

Leave a Comment