சினிமா

கவினின் ‘ஸ்டார்’ முதல் நாளில் ரூ.4 கோடி வசூல்!

கவின் நடித்துள்ள ‘ஸ்டார்’ திரைப்படம் முதல் நாள் உலகம் முழுவதும் ரூ.4 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘ஸ்டார்’. இந்தப் படத்தை ‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் இயக்கியுள்ளார். கவின், லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் மே 10ஆம் திகதியான நேற்று திரையரங்குகளில் வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படத்தில் கவின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ரூ.8 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.4 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விடுமுறை என்பதால் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலான திரையரங்குகளில் படத்துக்கு நல்ல புக்கிங் கிடைத்துள்ளது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மோடியின் ஆட்சியை புகழ்ந்த ராஷ்மிகா

Pagetamil

‘தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்’: ஜி.வி.பிரகாஷ் குமார்

Pagetamil

ஜி.வி.பிரகாஷை பிரிந்தது ஏன்? – பாடகி சைந்தவி விளக்கம்

Pagetamil

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி தம்பதியினர் பிரிந்தனர்!

Pagetamil

“தெலுங்கில் நடிப்பது சிரமமாக இருந்தது” – சம்யுக்தா

Pagetamil

Leave a Comment