மலையகம்

நாயுடன் மோதுவதை தவிர்க்க முற்பட்ட போது நிகழ்ந்த பயங்கரம்… ஒருவர் பலி!

பதுளை – மஹியங்கனை வீதியின் புவக்கொடமுல்ல பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் முச்சக்கரவண்டியும் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹியத்தகண்டிய டிப்போவுக்குச் சொந்தமான பஸ் ஒன்று தெஹியத்தகண்டிய சிறிபுரவிலிருந்து பதுளை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அதற்கு முன்னால் பதுளையிலிருந்து ரிதிபன நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியின் குறுக்கே நாய் ஒன்று குதித்து ஓட முற்பட்ட போது, முச்சக்கர வண்டிச்சாரதி நாயுடன் விபத்தை தவிர்க்க முற்பட்ட போது, எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கர வண்டியில் பயணித்த 79 வயதான ஒருவர் உயிரிழந்ததுடன், பெண் ஒருவரும் மூன்று ஆண்களும் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பஸ்ஸின் அடிப்பகுதியும் சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காலணி வர்த்தகரின் வீட்டில் கொள்ளையடித்த பொலிசார் கைது

Pagetamil

‘தும்பர சம்பவம் பெருந்தோட்ட நிர்வாகங்களின் அடாவடித்தனத்தின் இறுதியாக அமைய வேண்டும்’: ரூபன் பெருமாள் எச்சரிக்கை!

Pagetamil

பேருந்தை செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி!

Pagetamil

மாடியிலிருந்து விழுந்த பெண் மரணம்!

Pagetamil

பரீட்சைக்கு வந்த 2 மாணவிகள் மாயம்!

Pagetamil

Leave a Comment