முக்கியச் செய்திகள்

2 வருடங்களில் இலங்கையிலிருந்து வெளியேறிய 25.5 இலட்சம் பேர்: அதிர்ச்சித் தகவல்!

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகளின்படி கடந்த இரண்டு வருடங்களில் பொருளாதார நெருக்கடி காரணமாக 25,65,365 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு 1,127,758 பேரும், 2023ஆம் ஆண்டு 1,437,607 பேரும் வெளிநாடு சென்றுள்ளனர் என்றார்.

இவர்களில் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை 608,925 ஆகும். இது வெளிநாடு சென்ற மொத்த எண்ணிக்கையில் 24 சதவீதமாகும்.

கடந்த 2022 ஆம் ஆண்டில் 311,269 பேர் வெளிநாட்டு வேலைகளுக்காகவும், கடந்த ஆண்டில் 297,656 பேரும் வெளியேறியுள்ளனர் என்று பேராசிரியர் கூறினார்.

2023ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியவர்களில் சுமார் எழுபது வீதமானவர்கள் தொழில் ரீதியாக உயர் தகைமை பெற்ற பொறியியலாளர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள் போன்றவர்கள் எனத் தெரிவித்த வசந்த அத்துகோரள, கடந்த வருடம் வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் சென்றவர்களில் 34 வீதமானவர்கள் 25-34 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என  தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாடு சென்றவர்களில் 55 சதவீதம் பேர் ஆண்கள், 45 சதவீதம் பேர் பெண்கள்.

இதேவேளை, கடந்த இரண்டு வருடங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 18,200,479 ஆகும்.

பொருளாதார நெருக்கடி மற்றும் விரக்தியின் காரணமாக இவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

மிருசுவிலில் 8 தமிழர்கள் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கு: கொலையாளி சிப்பாயை மன்னித்த கோட்டாவுக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை!

Pagetamil

புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்தது இந்தியா!

Pagetamil

‘தமிழ் பொதுவேட்பாளர் கோட்பாடு தோல்வியடைந்தால் எமது தலையீட்டை தமிழர்கள் இழப்பார்கள்… இதன் பின்னணியில் நாங்கள் இல்லை’: பிரதான தமிழ் கட்சிகளிற்கு தெளிவுபடுத்திய வெளிநாட்டு தூதரங்கள்!

Pagetamil

‘வீடுகளில் நாய்க்குட்டி, பூனைக்குட்டிகள் நிறைந்துள்ளன… குழந்தைகள் இல்லை’: குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு இத்தாலிய இளையவர்களிடம் போப் மன்றாட்டம்!

Pagetamil

ரி20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு: வியாஸ்காந்த் மேலதிக வீரராக இணைப்பு!

Pagetamil

Leave a Comment