கிழக்கு

வாகரையில் மக்கள் போராட்டம்

வாகரைப் பிரதேசத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ள திட்டமிடப்படும் இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் இல்மனைட் தொழிற்சாலை அமைவதை முற்றாக தடை செய்யக்கோரிய கவனயீர்ப்பு போராட்டம் இன்று (22) வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பக மேற்கொள்ளப்பட்டது.

வாகரை பிரதேச பொதுமக்களினால் இவ் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இன்று காலை கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்று

கூடிய மக்கள் கையில் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய், சூழலை பாதிக்கும் இறால் வளர்ப்பு திட்டம் நமக்கு வேண்டாம், அகழாதே,அகழாதே, எம் மண்ணை அகழாதே, வெளியேறு வெளியேறு கொள்ளையர்களே வெளியேறு, இயற்கை வளங்களை அழிக்கும் செயல் திட்டங்கள் நமக்கு வேண்டாம் என்பன போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

இதேவேளை பிரதேச செயலக பிரதான நுழை வாயில் கதவினை பூட்டியவாறு எவரும் உள்ளே செல்லாத வகையில் போராட்டம் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகை தந்து நல்லதொரு பதில் தரவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இதன்போது கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் எந்திரி ஜீ.அருணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.
தாம் பதவிக்கு வந்தது முதல் இவ்வாறான செயற்பாட்டிற்கு புதிதாக எதுவிதமான அனுமதியும் வழங்கவில்லை என்றும் இனியும் வழங்கப் போவதில்லை என்று தெரிவித்தார். மேலும் இல்மனைட் அல்செமி கெவி மெட்டல் கம்பனியால் தனக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று அரசாங்க அதிபர் போராட்டத்தில் ஈடுபட்டோர் மற்றும் பிரதேச சிவில் அமைப்புக்களை சந்தித்து மேற்படி விடயங்கள் தொடர்பான நேரடி கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க அதிபர் தரப்பில் பதில் கூறப்பட்டது.

இதேபோன்று கிழக்கு மாகாண அளுநர் உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு வெளிநாட்டிற்கு சென்றுள்ளதால் இன்று சமூகம் தர முடியாமல் உள்ளதாக ஆளுநர் தரப்பில் பதில் கூறப்பட்டது.

மேற்படி விடயங்களை செவி மடுத்த போராட்டத்தில் ஈடுபட்டோர் தொடர்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை மேற்கொண்டதன் பின்னர் அவ்விடத்தினை விட்டு கலைந்து சென்றனர்.

வாகரை பிரதேச மக்கள் மேற்படி நடவடிக்கைகளுக்கு எதிராக அடிக்கடி பல்வேறு வகையான போராட்டங்களை தொடர்சியாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

க.ருத்திரன்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முள்ளிவாய்க்கால் நினைவுநாள் தடை கல்முனை, சம்மாந்துறையில் விலக்கல்!

Pagetamil

முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சிக்கு கல்முனை நீதிமன்றம் தடைநீக்கம்

Pagetamil

திருகோணமலையில் கைதான 4 தமிழர்களுக்கும் பிணை!

Pagetamil

வாழைச்சேனையில் நாய்கள் காப்பகம்

Pagetamil

கஞ்சித்தடையை நீக்கியது மூதூர் நீதிமன்றம்

Pagetamil

Leave a Comment