இலங்கை

யாழ்ப்பாண பத்திரிகைக்கு எதிராக வடக்கு ஆளுனர் பொலிசில் முறைப்பாடு!

வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் நல்லையா விஜயசுந்தரம் அவர்களுக்கு எதிராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டதையடுத்து வலம்புரியின் பிரதம ஆசிரியர் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி வலம்புரி பத்திரிகையில் பிரசுரமான “வடக்கு மாகாண ஆளுநருக்கு ஓர் அவசர மடல்” என்ற ஆசிரியர் தலையங்கத்திற்கு எதிராகவே குறித்த முறைப்பாடு பதிவாகி இருக்கிறது.

இதற்கமைய ஏப்ரல் 22 ஆம் திகதி இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு நீண்ட நேரம் விசாரணைக்குட்படுத்தபட்டதுடன் வாக்குமூலமும் வழங்கியுள்ளார்.

குறித்த முறைப்பாட்டினை வடக்கு மாகாண ஆளுநர் சார்பில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலக கணக்காளர் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சவப்பெட்டிகளுடன் முள்ளிவாய்க்கால் சென்ற ஊர்தி

Pagetamil

கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் பூட்டு

Pagetamil

30 வயதிற்குட்பட்ட 30 ஆசியா பட்டியலில் இலங்கை நடிகை

Pagetamil

மன்னாரில் அதானியின் காற்றாலை மின்திட்டம்: உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் அமைப்பு மனு!

Pagetamil

மன்னார் ரின் மீன் தொழிற்சாலை மீதான குற்றச்சாட்டின் பின்னணி!

Pagetamil

Leave a Comment