இலங்கை

ரூ.1900 கொத்துக்கடை உரிமையாளருக்கு பிணை!

கொழும்பு தெரு உணவகத்தில் இடியப்ப கொத்து ஒன்றின் விலை 1900 ரூபா என குறிப்பிட்டதுடன், வெளிநாட்டு சுற்றுலா பயணியுடன் முறையற்ற விதமாக நடந்ததாக குற்றச்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட உணவக உரிமையாளரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு, அளுத்கடையைச் சேர்ந்த மொஹமட் அமீர் ஹம்ஸா அமிர் என்பவரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக வாழைத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

வெளிநாட்டவரை அச்சுறுத்தி, வெளிநாட்டவரை தாக்கிய சந்தேக நபர், இலங்கைக்கு சர்வதேச அளவில் பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டதன் மூலம், இலங்கை குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை செய்துள்ளதாக  சுட்டிக்காட்டப்பட்டது.

சந்தேக நபருக்காக ஆஜரான சட்டத்தரணி, இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்ட வெளிநாட்டவர், இதுபோன்ற வீடியோவை தயாரிப்பதற்கு முன், கடைக்கு கடைக்கு குடிபோதையில் பயணம் செய்தவர் என்று கூறப்படுகிறது என்றர்.

ஜப்பானியர்கள் மற்றும் சீனர்கள் உட்பட ஒவ்வொரு வெளிநாட்டவரும் இந்த உணவுக் கடைக்கு வருவதாகவும், சந்தேகத்திற்குரிய நபர் அவர்களுக்கு மரியாதையுடனும், கண்ணியத்துடனும் பொருட்களை விற்கும் வீடியோக்கள் ஏராளமாக இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட வீடியோவை மீண்டும் எடிட் செய்து குரல் சேர்க்கப்பட்டு இணையத்தில் வெளியிட்டு இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாகவும் சட்டத்தரணி கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக வெளிநாட்டவர் அல்லது வேறு யாரும் முதற்கட்ட முறைப்பாடு செய்யவில்லை என்றும், இந்த வீடியோவில் இருந்து இதுபோன்று எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும் சுற்றுலா பயணி குறிப்பிட்டதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டார்.

இருதரப்பு உண்மைகளையும் பரிசீலித்த நீதவான் சந்தேகநபரின் பிணையை நிர்ணயம் செய்து முறைப்பாடு விசாரணையை ஒத்திவைத்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சவப்பெட்டிகளுடன் முள்ளிவாய்க்கால் சென்ற ஊர்தி

Pagetamil

கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் பூட்டு

Pagetamil

30 வயதிற்குட்பட்ட 30 ஆசியா பட்டியலில் இலங்கை நடிகை

Pagetamil

மன்னாரில் அதானியின் காற்றாலை மின்திட்டம்: உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் அமைப்பு மனு!

Pagetamil

மன்னார் ரின் மீன் தொழிற்சாலை மீதான குற்றச்சாட்டின் பின்னணி!

Pagetamil

Leave a Comment