இலங்கை

ரூ.1900க்கு இடியப்ப கொத்து விற்க முயன்றவர் கைது!

வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரிடம் முறையற்ற விதமக நடந்துக் கொண்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு தெரு உணவு விற்பனையாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு இடியப்ப கொத்து ஒன்றின் விலை 1,900 ரூபாய் என சந்தேகநபர் குறிப்பிடும் நிலையில், இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணி விலை அதிகமாக இருப்பது பற்றி கடை உரிமையாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு அவர் விருப்பம் இருந்தால் வாங்குங்கள். இல்லையென்றால் சென்று விடுங்கள் என கடை உரிமையாளர் கடுமையாக நடந்து கொண்டுள்ளார்.

இதனை குறித்த சுற்றுலாப் பயணி காணொளியக பதிவு செய்த நிலையில் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியதை தொடர்ந்து சந்தேகநபரான தெரு உணவு விற்பனையாளர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெசல்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளுத்கடை பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 51 வயதுடையவர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

சவப்பெட்டிகளுடன் முள்ளிவாய்க்கால் சென்ற ஊர்தி

Pagetamil

கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் பூட்டு

Pagetamil

30 வயதிற்குட்பட்ட 30 ஆசியா பட்டியலில் இலங்கை நடிகை

Pagetamil

மன்னாரில் அதானியின் காற்றாலை மின்திட்டம்: உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் அமைப்பு மனு!

Pagetamil

மன்னார் ரின் மீன் தொழிற்சாலை மீதான குற்றச்சாட்டின் பின்னணி!

Pagetamil

Leave a Comment