இலங்கை

காதலிக்க மறுத்த 19 வயதான யுவதியையும், தாயையும் வெட்டிவிட்டு உயிரை மாய்த்த 37 வயது நபர்: யாழில் சம்பவம்!

19 வயதான யுவதியையும், அவரது தாயாரையும் கத்தியால் வெட்டிவிட்டு, 37 வயதான நபர் பொலிசாருக்கு பயந்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.

காதல் விவகாரத்தினாலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

பண்டத்தரிப்பு, பனிப்புலத்திலுள்ள வளவொன்றில் இளைஞன் தூக்கிட்டு உயிர்மாய்த்த நிலையில் காணப்பட்டார்.

இன்று (16) இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.

குணதிலகம் பிரணவன் (37) என்ற இளைஞனே உயிரை மாய்த்துள்ளார். அவர் அதிக மதுபாவனை, போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை 6 மணியளவில் பனிப்புலத்துக்கு அண்மையான பகுதியிலுள்ள வீட்டுக்கு சென்று, 19 வயதான யுவதியின் பெயரைச் சொல்லி அழைத்துள்ளார். யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு யுவதி வெளியே வந்தபோது, அவரை சிறிய கத்தியால் குத்தியுள்ளார். யுவதியின் அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த தாயாரையும் கத்தியால் குத்திவிட்டு, அந்த நபர் தப்பியோடியுள்ளார்.

இந்த நபர் ஏற்கெனவே திருமணமானவர்.

பல வருடங்களின் முன்னர், மாணவி பருவத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்தார். பின்னர், திருமண வயதை எட்டாத மற்றொரு சிறுமியுடன் உறவிலிருந்ததாக, அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டிருந்தார்.

பின்னர், பெற்றோருடன் வசித்து வந்தார்.

அண்மைக்காலமாக பனிப்புலம் பகுதியிலுள்ள 19 வயதான யுவதியொருவருடன் காதல் வசப்பட்டிருந்தார். எனினும், காதலித்த நபரின் நடத்தை தொடர்பில் அதிருப்தியடைந்த யுவதி, தொடர்பை நிறுத்தியுள்ளார்.

எனினும், அதை ஏற்க மறுத்த நபர், குறித்த யுவதியை தொல்லை செய்து கொண்டிருந்துள்ளார். யுவதியின் குடும்பத்தினர் கடந்த வாரம் இளவாலை பொலிசாரிடம் இது குறித்து முறையிட்டதையடுத்து, இரு தரப்பை அழைத்த பொலிசார், இளைஞனை எச்சரிக்கை செய்து அனுப்பியிருந்தனர்.

நேற்று மாலையில், குறிப்பிட்ட நபர், தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு, அங்குள்ள கோயிலொன்றில் படுத்திருந்துள்ளார். காதல் விவகாரத்தால் விரக்தியடைந்திருந்தவர், இது குறித்து புலம்பிக் கொண்டிருந்ததாக நண்பர்கள் வட்டாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாலையிலேயே காதலி வீட்டு பகுதிக்கு சென்றவர், அங்குள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடமொன்றில் தங்கியிருந்து விட்டு, காலை 6 மணியளவில் காதலி வீட்டுக்கு சென்று, அவரையும் தாயாரையும் கத்தியால் குத்தியுள்ளார்.

அவர்கள் சிறியளவிலான காயத்துக்கு உள்ளாகினர்.

இதை தொடர்ந்து, தப்பியோடிய நபர், பொலிசார் தன்னை கைது செய்யப் போகிறார்கள் என பீதியடைந்திருந்ததாக நண்பர்கள் வட்டாரத்தில் குறிப்பிடப்படுகிறது. இதை தொடர்ந்தே, தனது உயிரை மாய்த்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சவப்பெட்டிகளுடன் முள்ளிவாய்க்கால் சென்ற ஊர்தி

Pagetamil

கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் பூட்டு

Pagetamil

30 வயதிற்குட்பட்ட 30 ஆசியா பட்டியலில் இலங்கை நடிகை

Pagetamil

மன்னாரில் அதானியின் காற்றாலை மின்திட்டம்: உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் அமைப்பு மனு!

Pagetamil

மன்னார் ரின் மீன் தொழிற்சாலை மீதான குற்றச்சாட்டின் பின்னணி!

Pagetamil

Leave a Comment