விளையாட்டு

ஐபிஎல் போட்டிகளில் அதிக ஓட்டம்: பெங்களூரை புரட்டிப் போட்டது சன்ரைசஸ்!

நடப்பு ஐபிஎல் சீசனின் 30வது லீக் போட்டியில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 25 ரன்களில் வெற்றி பெற்றது.

பெங்களூரு எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ரொஸ் வென்ற ஆர்சிபி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது.  இதில் டிராவிஸ் ஹெட் 102 ரன்களை குவித்தார். இதன்மூலம் அந்த அணி புதிய ஐபிஎல் சாதனை படைத்தது.

ரொஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்த தேர்வு எத்தனை மோசமானது என்பதை ஹைதராபாத் அணியின் ஓப்பனர்களான அபிஷேக் சர்மாவும், டிராவிஸ் ஹெட்டும் உணர்த்தினர். தங்களை நோக்கி வரும் பந்துகளை இருவரும் பாட்னர்ஷிப் அமைத்து விளாசினர். விக்கெட் எடுக்க முடியாமல் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் திணற 8 ஓவர்களுக்கு 108 ரன்களைச் சேர்த்தது இந்த இணை.

ரீசே டோப்லி வீசிய 9ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா 34 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென், டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 8 சிக்சர்களை விளாசி 41 பந்துகளில் 102 ரன்களைச் சேர்ந்த டிராவிஸ் ஹெட்டை 13-வது ஓவரில் லாக்கி பெர்குசன் அவுட்டாக்கினார். ஆர்சிபிக்கு அந்த விக்கெட் பெரும் நிம்மதியைக் கொடுத்தது.

7 சிக்சர்களை விளாசி சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த கிளாசென் 67 ரன்களில் களத்திலிருந்து வெளியேறினார். அடுத்து வந்த அப்துல் சமத் – எய்டன் மார்க்ரம் கூட்டணி அமைத்து கடைசி நேரத்தில் சிக்ஸ், பவுண்டரி என விளாசித் தள்ள நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் 287 ரன்களை குவித்து மிரட்டியது. ஆர்சிபி அணி தரப்பில் லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளையும், ரீசே டோப்லி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடரில் மார்ச் 27ஆம் திகதி நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்களை குவித்து அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் சாதனையை படைத்திருந்தது ஹைதராபாத். தற்போது தனது ரெக்கார்டை தானே முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது. அதன்படி ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் என்பது ஹைதராபாத்தின் இன்றைய 287 என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரில் அதிகபட்ச சிக்சர்களை விளாசிய அணி என்ற பெருமையை பெற்றுள்ளது ஹைதராபாத். இந்த போட்டியில் மட்டும் 22 சிக்சர்கள் விளாசப்பட்டுள்ளன.

288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆர்சிபி விரட்டியது. கோலி மற்றும் கப்டன் டூப்ளசி இணைந்து முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் எடுத்தனர். கோலி, 20 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து மயங்க் மார்க்கண்டே சுழலில் போல்ட் ஆனார். அடுத்து வந்த வில் ஜேக்ஸ் துரதிர்ஷ்டவசமாக நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் ரன் அவுட் ஆனார். டூப்ளசி நேராக ஆடிய பந்தை அப்படியே லாவகமாக நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த ஸ்டம்ப் பக்கமாக தட்டி விட்டார் உனத்கட். அது ஸ்டம்பை தகர்க்க வில் ஜேக்ஸ் அவுட் ஆனார்.

ரஜத் பட்டிதார், டூப்ளசி, சவுரவ் சவுகான் ஆகியோர் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். பின்னர் லோம்ரோர் மற்றும் தினேஷ் கார்த்திக் இணைந்து 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். லோம்ரோரை 19 ரன்களில் வெளியேற்றினார் கம்மின்ஸ்.

சிறப்பாக பேட் செய்த தினேஷ் கார்த்திக், 35 பந்துகளில் 83 ரன்கள் விளாசினார். 5 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். ஆர்சிபி அணிக்காக ஒன் மேன் ஆர்மியாக களத்தில் செயல்பட்டார் டிகே. 19-வது ஓவரில் அவரை அவுட் செய்தார் நடராஜன். அவருக்கு அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் உதவியிருந்தால் இலக்கை ஆர்சிபி அணி இன்னும் நெருங்கி செல்லும் வாய்ப்பை பெற்றிருக்கும்.

20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது ஆர்சிபி. அதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 25 ரன்களில் வெற்றி பெற்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிளே ஓஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது யார்?: சிஎஸ்கே – ஆர்சிபி இன்று பலப்பரீட்சை

Pagetamil

லக்னோவை டெல்லி வீழ்த்தியதன் விளைவு: சிஎஸ்கே, ஆர்சிபி அணியின் பிளே ஓஃப் நிலை என்ன?

Pagetamil

கே.எல்.ராகுலுக்கு விருந்து வைத்த லக்னோ அணி உரிமையாளர்

Pagetamil

டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த ஆண்டர்சன்

Pagetamil

பிஎஸ்ஜி அணியில் இருந்து வெளியேறுவதாக எம்பாப்பே அறிவிப்பு!

Pagetamil

Leave a Comment