கிழக்கு

14 வயது சிறுமியை கடத்திய 17 வயது காதலன் கைது!

14 வயது மாணவியை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் 17 வயது இளைஞர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் திங்கட்கிழமை (15) காலை கைது செய்துள்ளனர் .

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கிரான்குளத்தைச் சேர்ந்த மேற்படி மாணவியை காதல் என்ற பெயரில் கடத்திச் சென்ற திருகோணமலை குச்சவெளியைச் சேர்ந்த 17 வயது இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

கடத்திச் சென்று கொழும்பில் சில நாட்கள் தங்கி இருந்தபின் மீண்டும் சொந்த இடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (14) திரும்பி வீட்டில் தங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸார் இளைஞனை கைது செய்துள்ளனர்

குச்சவெளியிலிருந்து கிரான் குளத்துக்கு ஏப்ரல் 9ஆம் திகதி வந்த மேற்படி காதலன் குறித்த மாணவியை கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளார் கொழும்பிலிருந்து மீண்டும் ஞாயிறுக்கிழமை (14) ஊர் திரும்பிய நிலையில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞர் காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞர் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மாணவி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முள்ளிவாய்க்கால் நினைவுநாள் தடை கல்முனை, சம்மாந்துறையில் விலக்கல்!

Pagetamil

முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சிக்கு கல்முனை நீதிமன்றம் தடைநீக்கம்

Pagetamil

திருகோணமலையில் கைதான 4 தமிழர்களுக்கும் பிணை!

Pagetamil

வாழைச்சேனையில் நாய்கள் காப்பகம்

Pagetamil

கஞ்சித்தடையை நீக்கியது மூதூர் நீதிமன்றம்

Pagetamil

Leave a Comment