கிழக்கு

2 பிள்ளைகள் துஷ்பிரயோகம்: தந்தை கைது

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தான் பெற்ற இரண்டு பிள்ளைகளை துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் தந்தையை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பலகாமம் சிராஜ் நகர் பகுதியில் வசித்து வரும் 28வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

மனைவி வெளிநாட்டுக்குச் சென்றிருந்த நிலையில் தனது 2 பிள்ளைகளும் தனது கண்காணிப்பில் இருந்ததாகவும் இந்நிலையில் 5 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த நிலையில் தம்பலகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேவேளை, மூன்று வயது சிறுமி சலம் கழிக்கும் போது கத்தி கதறிக் கொண்டிருந்த வேலை குறித்த நபரின் உறவினர்களினால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு நிலையில் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை அவதானிக்க வைத்தியர்கள் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மூன்று வயது சிறுமியின் வாக்குமூலம் பெற்றதை அடுத்து அச்சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இதே நேரம் ஐந்து வயது சிறுவனிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் தகப்பன் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும் 5 வயது சிறுவன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதனை அடுத்து 28 வயதுடைய தந்தையை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தந்தையரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களும் திருகோணமலை பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முள்ளிவாய்க்கால் நினைவுநாள் தடை கல்முனை, சம்மாந்துறையில் விலக்கல்!

Pagetamil

முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சிக்கு கல்முனை நீதிமன்றம் தடைநீக்கம்

Pagetamil

திருகோணமலையில் கைதான 4 தமிழர்களுக்கும் பிணை!

Pagetamil

வாழைச்சேனையில் நாய்கள் காப்பகம்

Pagetamil

கஞ்சித்தடையை நீக்கியது மூதூர் நீதிமன்றம்

Pagetamil

Leave a Comment