மன்னார் -தாழ்வுபாடு பிரதான வீதி ரெலிக்கொம் சந்திக்கு அருகாமையில் ஞாயிற்றுக்கிழமை (7) மாலை இடம்பெற்ற விபத்தில் மன்னாரில் உணவகத்தில் பணியாற்றிவந்த 22 வயதான இளைஞன் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்
ஹட்டன் பகுதியை சேர்ந்த சந்திரகுமார் (சந்துரு) என்பவரே உயிரிழந்தார்.
இவர் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக மன்னார் மாவட்டத்தில் உணவகங்களில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (7) மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம் பெற்று சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இளைஞன் பலியாகியுள்ளார்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1