31.4 C
Jaffna
April 12, 2024
இலங்கை

மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவனை கட்டி வைத்து அடித்துக் கொன்ற மனைவி!

மாத்தறை வெலிகம பிரதேசத்தில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த கணவர், தனது மனைவியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். அவரது இரண்டு பிள்ளைகள் தற்போது வெளிநாட்டில் கல்வி கற்கிறார்கள்.

மாத்தறை, வெலிகம, கொஸ்கஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் இவர், நேற்று முன்தினம் இரவு மது போதையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை தாக்கியதால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இவர் நேற்று இரவு குடிபோதையில் வந்து மனைவியை தாக்க முயன்றார். அப்போது, அவரது 15 வயதான மகளும், அயலவர்கள் சிலரும் இருந்துள்ளனர்.

இதன்போது மனைவி அயலவர்கள் சிலருடன் இணைந்து சேர்ந்து வீட்டின் முன் உள்ள மின்கம்பத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த கதிரையில் கணவனை கட்டிப்போட்டுள்ளார்.

பின்னர், அவரது மனைவி உள்ளிட்டவர்கள் அவரைத் தாக்கியுள்ளனர். தனது கணவரை தாக்கும் வீடியோவை, மகனுக்கு நேரலையில் மனைவி காண்பித்துள்ளார்.

தாக்குதலில் மயக்கமடைந்த அவர், வெலிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்டப்பட்ட கயிற்றில் கழுத்து இறுகி இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி உள்ளிட்ட மூவரை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நீர்ப்பாசன வாய்க்காலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Pagetamil

இளைஞனின் விதைப்பை சேதமான சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசாருக்கு விளக்கமறியல்!

Pagetamil

4வது மாடியிலிருந்து விழுந்து பெண் பலி

Pagetamil

ஹோட்டல் அறையில் யுவதி மர்ம மரணம்!

Pagetamil

வட இந்து ஆரம்ப பாடசாலை நிதி சேகரிப்பு முறைப்பாடு: அதிபர், வலயக்கல்வி பணிப்பாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை!

Pagetamil

Leave a Comment