31.4 C
Jaffna
April 12, 2024
இலங்கை

யாழில் போதைமாத்திரை விற்பனை செய்த 6 இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்ட 6 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்தவின் கண்காணிப்பில் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

யாழ் மாவட்ட குற்றதடுப்பு பிரிவினரும் இணைந்து நடத்திய சுற்று வளைப்பில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குருநகரை சேர்ந்த ஐவரும் யாழ்ப்பாணம் நாவாந்துறையை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 18,19,20,21 வயதுடையவர்கள்.

யாழ் நகரையண்டிய பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடும் கும்பல் பற்றிய தகவல் கிடைத்ததும், இன்று சென் பற்றிக்ஸ் பாடசாலைக்கு அருகில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் 3 பேர் போதை மாத்திரைகளுடன் கைதாகினர்.

மேலதிக விசாரணையில், போதை மாத்திரை வலையமைப்பின் பிரதான சந்தேகநபரான நாவாந்துறை இளைஞனை பொலிசார் கைது செய்ய முற்பட்ட போது, அவர் முச்சக்கர வண்டியை கைவிட்டு, தப்பியோடினார். அவரை பொலிசார் விரட்டிப் பிடித்தனர்.

அவரது வீட்டிலிருந்து 300 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.

அவர் கொழும்பிலிருந்து போதை மாத்திரைகளை பெறும் வழிகள் தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நீர்ப்பாசன வாய்க்காலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Pagetamil

இளைஞனின் விதைப்பை சேதமான சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசாருக்கு விளக்கமறியல்!

Pagetamil

4வது மாடியிலிருந்து விழுந்து பெண் பலி

Pagetamil

ஹோட்டல் அறையில் யுவதி மர்ம மரணம்!

Pagetamil

வட இந்து ஆரம்ப பாடசாலை நிதி சேகரிப்பு முறைப்பாடு: அதிபர், வலயக்கல்வி பணிப்பாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை!

Pagetamil

Leave a Comment