31.4 C
Jaffna
April 12, 2024
இலங்கை

மின்சாரம் தாக்கி உயிரிழந்த இலங்கை யுவதியின் சடலம் எடுத்து வரப்பட்டது!

பல வருடங்களின் பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பெய்த பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த இலங்கைப் பெண் ஜயமினி சடமாலி விஜேசிங்கவின் சடலம் இன்று (03) அதிகாலை சார்ஜாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டது.

களுத்துறை, மத்துகம பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய ஜயமினி சந்தமாலி விஜேசிங்க என்ற யுவதியே உயிரிழந்தார்.

இவர் மத்துகம சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கர மத்திய மகா வித்தியாலயத்தில் கணிதப் பிரிவில் உயர்தரம் கற்ற மாணவியாவார்.

அவர் சார்ஜாவில் தகவல் தொடர்பு நிறுவனத்தில் வரவேற்பாளராக 11 மாதங்கள் பணிபுரிந்தார்.

கடந்த மார்ச் மாதம் 09 ஆம் திகதி இரவு 09.30 மணியளவில் தான் தங்கியிருந்த விடுதியில் இருந்து எதிரே அமைந்துள்ள கடைக்கு செல்வதற்காக வந்துள்ளார்.

அந்த நேரத்தில், பல ஆண்டுகளுக்குப் பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பெய்த தொடர் மழையால் ஷார்ஜாவும் வெள்ளப் பேரழிவைச் சந்தித்தது.

அந்த பகுதியில் மின் வயரிங் அமைப்பும் பூமிக்கடியில் அமைக்கப்பட்டு, இந்த வெள்ள சூழ்நிலையால், இந்த மின் அமைப்பில் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனை அறியாத ஜெயமினி சந்தமாலி விஜேசிங்கவும் இந்த வெள்ளத்தில் விழுந்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

அந்த நேரத்தில், இரண்டு எகிப்தியர்கள், ஒரு பங்களாதேஷ் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் பிரஜைகளும் இந்த இடத்தில் மின்சாரம் தாக்கி இறந்தனர்.

அவரது சடலம் இன்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நீர்ப்பாசன வாய்க்காலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Pagetamil

இளைஞனின் விதைப்பை சேதமான சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசாருக்கு விளக்கமறியல்!

Pagetamil

4வது மாடியிலிருந்து விழுந்து பெண் பலி

Pagetamil

ஹோட்டல் அறையில் யுவதி மர்ம மரணம்!

Pagetamil

வட இந்து ஆரம்ப பாடசாலை நிதி சேகரிப்பு முறைப்பாடு: அதிபர், வலயக்கல்வி பணிப்பாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை!

Pagetamil

Leave a Comment