30.1 C
Jaffna
April 23, 2024
இலங்கை

சூரிய உதயம் காண சென்ற கனடா தம்பதியை தாக்கிய யானை

நேற்று (02) அதிகாலை சிகிரியாவில் சூரிய உதயத்தை பார்வையிடுவதற்காக சரணாலயத்தில் நடந்து சென்ற கனேடிய தம்பதியினர் யானை தாக்குதலுக்கு இலக்காகியதில் பெண் படுகாயமடைந்து தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காட்டு யானை தாக்கிய போது, ​​வெளிநாட்டவர்களின் அலறல் சத்தம் கேட்டு சுற்றுலா வழிகாட்டி ஒருவர் உடனடியாக அந்த இடத்திற்கு வந்துள்ளார், ஏற்கனவே காட்டு யானையால் வெளிநாட்டு பெண் தாக்கப்பட்டுள்ளார். பின்னர், மிகுந்த முயற்சியால் மீட்கப்பட்டார்.

சுற்றுலா வழிகாட்டி தம்பதியை உடனடியாக மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாக சீகிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுற்றுலா பயணிகளின் உயிரை காப்பாற்ற முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக சுற்றுலா வழிகாட்டி கண்ணீருடன் தெரிவித்தார்.

சீகிரியா பயணச்சீட்டு வழங்கும் நிலையத்திற்கு சுமார் 100 மீற்றர் தூரம் நடந்து சென்று கொண்டிருந்த போதே குறித்த காட்டு யானைகளால் இவர்கள் இருவரும் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த யானைகளின் தாக்குதலுக்கு இலக்கான கனேடிய பிரஜையான திருமதி லெக்னவ்ஸ்கா கட்டரினா (36) பலத்த காயமடைந்துள்ளார். யானை தாக்கியதில் அவரது கணவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் வெளிநாட்டு பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஈரான் ஜனாதிபதிக்கு கொழும்பில் வரவேற்பு பதாதைகள்

Pagetamil

யாழில் விபத்து!

Pagetamil

பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

Pagetamil

யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் உயிரிழப்பு!

Pagetamil

வவுனியா வைத்தியசாலையில் கர்ப்பிணி தாயும், சிசுவும் பலி

Pagetamil

Leave a Comment