30.1 C
Jaffna
April 23, 2024
இந்தியா

வீடு புகுந்து மிரட்டியதாக நடிகை சரண்யா மீது பெண் புகார்

வீடு புகுந்து மிரட்டியதாக நடிகை சரண்யா மீது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தமிழ் சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகையாக உள்ளவர் சரண்யா பொன்வண்ணன். இவர் `நாயகன்’,`எம்டன் மகன்’, `வேலையில்லா பட்டதாரி’, `ஒரு கல் ஒரு கண்ணாடி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இவர், விருகம்பாக்கம் பத்மாவதி நகரில்உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

இவரது பக்கத்து வீட்டில் ஸ்ரீதேவி (43) என்பவர் வசிக்கிறார். இவர், நேற்று முன்தினம் மதியம் மருத்துவமனைக்கு செல்ல, காரை எடுக்க வீட்டு கேட்டை திறந்துள்ளார். அப்போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த நடிகை சரண்யாவின் கார் மீது உரசியதாக கூறப்படுகிறது.

இதனால், கோபமடைந்த நடிகை சரண்யா, ஸ்ரீதேவி வீட்டுக்குச் சென்று தகாதவார்த்தையில் பேசி மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஸ்ரீதேவி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே நீச்சல் முயற்சி: நடுக்கடலில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த முதியவர்!

Pagetamil

320-ஐ எட்டிய ரத்த சர்க்கரை அளவு: கேஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி; கட்சி தகவல்

Pagetamil

கர்நாடக பல்கலைக்கழகத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் மகள் கொலை: லவ் ஜிகாத் என தந்தை குற்றச்சாட்டு

Pagetamil

இந்திய தேர்தலில் முதன்முறையாக வாக்களித்த இலங்கை அகதிமுகாம் பெண்!

Pagetamil

கன்னடத்தில் பேசியதால் நடிகை, கணவர் மீது தாக்குதல்

Pagetamil

Leave a Comment