26.9 C
Jaffna
April 24, 2024
இலங்கை

விளையாட்டு வினையானது: ஆசன வாயில் காற்று நிரப்பும் இயந்திர குழாயை செருகியதால் குடல் வெடித்து தொழிலாளி பலி!

மபிம பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் பழுதுபார்ப்பு பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் ஆசனவாயில் விளையாட்டாக காற்று நிரப்பும் இயந்திரக் குழாயை செருகி காற்று நிரப்பியதால், அவர் குடல் வெடித்து உயிரிழந்துள்ளார்.

இதில் தொடர்புடைய இரு தொழிலாளர்களை சப்புகஸ்கந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அந்த நிறுவனத்தில் பணியாற்றிய பாணந்துறை அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தேஷான் மதுஷங்க என்ற இருபத்தி நான்கு வயதுடைய இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (25ஆம் திகதி) பிற்பகல், அதே நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள், உயிரிழந்த ஊழியரின் ஆசனவாயில் விளையாட்டாக காற்று நிரப்பும் இயந்திரத்தின் குழாயை பிடித்துள்ளனர். இதன்போது, குழாய் செருகுப்பட்டு, உடனடியாக அகற்ற முடியாமல் போனது. அத்துடன், அதிக அழுத்தத்தில் காற்று உட்செலுத்தப்பட்டதால் குடல் வெடித்து ஊழியர் உயிரிழந்தார்.

உயிரிழந்த ஊழியரின் பிரேத பரிசோதனை நேற்று (29ம் திகதி) ராகம வைத்தியசாலையில் நடைபெறவிருந்தது.

கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய தொழிலாளர்கள் இருவரும் திஸ்ஸமஹாராமய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மின்சாரசபை ஊழியர் சங்க போராட்டத்து எதிராக நீதிமன்ற உத்தரவு

Pagetamil

ஈரான் ஜனாதிபதிக்கு கொழும்பில் வரவேற்பு பதாதைகள்

Pagetamil

யாழில் விபத்து!

Pagetamil

பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

Pagetamil

யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் உயிரிழப்பு!

Pagetamil

Leave a Comment