26.7 C
Jaffna
December 10, 2024
Pagetamil
குற்றம்

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

ராகம பிரதேசத்தில் உள்ள 23 வயது யுவதியின் முகநூல் கணக்கிற்கு இரகசியமாக நுழைந்து அவரது நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி, பாலியல் இலஞ்சம் கோரிய 21 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் பிலியந்தலை பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் க.பொ.த சாதரண தரப் பரீட்சைக்கு மாத்திரம் தோற்றியவர் எனவும் கணனி அறிவு இல்லாவிட்டாலும் பிறரது சமூக ஊடக வலையமைப்பிற்குள் பிரவேசிக்கும் திறன் கொண்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

முறைப்பாட்டாளரான ராகம யுவதியுடன் முகநூல் நட்பாக இருந்த சந்தேகநபர், யுவதியை காதலிக்க அனுமதி கோரியுள்ளார். எனினும், யுவதி அதனை விரும்பவில்லை.

சந்தேகநபர் யுவதியின் காதலனுக்கு லிங்கை அனுப்பியதாகவும், அவர் அதனை திறந்தவுடன் அவரது கணக்கை ஹேக் செய்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

பின்னர், காதலனின் முகநூலில் இருந்து யுவதியின் நிர்வாண புகைப்படங்கள் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

வெளிநபர் ஒருவர் தனது முகநூல் கணக்கிற்குள் இரகசியமாக நுழைந்ததை அறிந்த காதலன் அதனை யுவதியிடம் கூறியதாகவும், சந்தேகநபர் யுவதிக்கு வேறு நபர்களின் நிர்வாண புகைப்படங்களை அனுப்பி சமூக ஊடகங்களில் பகிருமாறு அச்சுறுத்தியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனது முகநூல் கணக்கிற்குள் ஒருவர் நுழைந்து தனது காதலன் வடிவில் குறுஞ்செய்திகளை அனுப்பி தனது நிர்வாண புகைப்படங்களை கேட்டு மிரட்டுவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் யுவதி முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிசாரின் ஆலோசனைப்படி, சந்தேகநபருக்கு யுவதி குறுஞ்செய்தியொன்றை அனுப்பியுள்ளார். தன்னை சந்திக்க பிலியந்தலை பஸ் நிலையத்திற்கு வருமாறு அதில் குறிப்பிட்டுள்ளார். முகநூலில் அறிமுகமான பெண்ணை காதலிக்கலாம் என்ற நம்பாசையில் வந்த சந்தேக நபர், அங்கு சிவில் உடையில் மறைந்திருந்த பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஹிக்கடுவை கோனாபினுவல பகுதியில் இருந்து யுவதியை சந்திப்பதற்காக வந்த போது, ​​தொழிற்சாலை ஒன்றில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொள்ள போவதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். சந்தேக நபர் சில சொக்லேட் பொதிகளையும் யுவதிக்கு கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இவ்வாறு பல யுவதிகளிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முழங்காவில் உணவகத்துக்குள் புகுந்து வாள்வெட்டு

Pagetamil

ஓமந்தைக் கொலையுடன் தொடர்புடைய 5 பேர் கைது!

Pagetamil

சிறுமியின் தலைமுடியை வெட்டிய வளர்ப்புத்தாய் கைது!

Pagetamil

மொடலாக மாற ஆசைப்பட்ட 23 வயது யுவதி வல்லுறவு!

Pagetamil

மனைவியை கொன்ற கணவன்!

Pagetamil

Leave a Comment