30.1 C
Jaffna
April 23, 2024
குற்றம்

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

ரம்பேவ நகரில் இடம்பெற்ற இசைக் கச்சேரியில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட மூவர் உயிரிழந்த கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 21 வயதான யுவதி நேற்று முன்தினம் (23) உயிரிழந்துள்ளார்.

அவரது கடைசி ஆசையின்படி அவரது கண்கள், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் நேற்று (24) தானமாக வழங்கப்பட்டது. இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்த அநுராதபுரம் கெதேவ, சியம்பலகஸ்வெவ பிரதேசத்தில் ரம்பேவ பிரதேசத்தில் வசித்து வந்த உபேக்ஷா சந்தமாலி சேனாரத்ன என்ற யுவதியின் உடலிலிருந்து உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன.

பிரபல பல்பொருள் அங்காடி சங்கிலியொன்றின் அனுராதபுர கிளையில் பணிபுரிந்த இந்த யுவதி, குடும்பத்தில் இளைய பிள்ளை என்பதுடன் மூத்த சகோதரனும் சகோதரியும் உள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி ரம்பேவ மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இசைக் கச்சேரியை காண தனது குடும்பம் மற்றும் காதலனுடன் சென்ற இந்த யுவதி, கச்சேரியை பார்த்துவிட்டு, மறுநாள் (9) அதிகாலை வீட்டுக்குச் செல்லத் தயாராக இருந்த வேளையில், இசைக் கச்சேரி நடைபெற்ற மைதானத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் அவர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள்களை எடுத்து வருவதற்காக இந்த யுவதி உள்ளிட்ட 5 பேர் நடந்து சென்றுள்ளார். அப்போது 18, 19 வயதுடைய இளைஞர்கள் பயணித்த கப் வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரம் கூட இல்லாத 19 வயதுடைய கப் வண்டியின் சாரதி விபத்தின் பின்னர் தொடர்ந்து வாகனத்தை ஓட்டிச் சென்று, வாகன திருத்தகம் ஒன்றில்  கப் வாகனத்தை மறைத்து வைத்தார். எனினும், அன்றைய தினம் மூன்று சந்தேக நபர்களுடன் அனுராதபுரம் பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். .

விபத்தில் படுகாயமடைந்த இரு பாடசாலை மாணவர்களும், தற்போது உயிரிழந்த யுவதியின் காதலனான இராணுவ சிப்பாய் ஒருவரும் விபத்து இடம்பெற்று சில மணித்தியாலங்களின் பின்னர் உயிரிழந்ததுடன், 15 நாட்களாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த உபேக்ஷா சண்டமாலி நேற்று முன்தினம் (23) உயிரிழந்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பழங்கால அம்மன் சிலையுடன் முன்னாள் போராளி கைது!

Pagetamil

யாழில் போதைப்பொருள் வாங்குவதற்காக திருடிய இளைஞன் பொலிஸ் புலனாய்வு பிரிவிடம் சிக்கினார்!

Pagetamil

43 வயது மனைவி கொலை: 25 வயது கணவன் சந்தேகத்தில் கைது!

Pagetamil

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 56 வயது ஆசாமிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

மாமியை கொன்று கொள்ளையடித்த மருமகன் கைது!

Pagetamil

Leave a Comment