30.1 C
Jaffna
April 23, 2024
முக்கியச் செய்திகள்

இலங்கைக்கு பெரு வெற்றி

சில்ஹெட் மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்களால் பெரு வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்சை போலவே, இரண்டாவது இன்னிங்சிலும் பங்களாதேஷ் துடுப்பாட்டக்காரர்களை இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் வேட்டையாடினர்.

மொமினுல் ஹக் 148 பந்துகளை சந்தித்து, ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் எடுத்தார். பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 182 ஓட்டங்களை மாத்திரமே  பெற்றது.

கசுன் ராஜித 56 ஓட்டங்ளுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை முதல் இன்னிங்சில் 280 ஓட்டங்களை பெற்றிருந்தது. தனஞ்சய சில்வா 102, கமிந்து 102 ஓட்டங்களை பெற்றனர்.

பங்களாதேஷ் 188 ஓட்டங்களுக்கு முதல் இன்னிங்சில் சுருண்டது.

இலங்கை இரண்டாவது இன்னிங்சில் 418 ஓட்டங்களை பெற்றது.  கமிந்து 164, தனஞ்சய 108 ஓட்டங்களை பெற்றனர்.

511 என்ற சாத்தியமற்ற இலக்கை விரட்டிய பங்களாதேஷ் 182 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இந்த டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணியின் 20 விக்கெட்டுக்களையும் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்களே கைப்பற்றியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போதை ஊசி ஏற்றப்பட்டு 10 பேரால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டாரா யாழ் இளம்பெண்?

Pagetamil

மாலைதீவு நாடாளுமன்ற தேர்தலிலும் சீன ஆதரவு தரப்பு அமோக வெற்றி!

Pagetamil

2 வருடங்களில் இலங்கையிலிருந்து வெளியேறிய 25.5 இலட்சம் பேர்: அதிர்ச்சித் தகவல்!

Pagetamil

ஈரானுக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்!

Pagetamil

திருகோணமலையையும், கிழக்கையும் தமிழர்கள் இழந்தது சம்பந்தனின் அரசியலாலேயே: க.வி.விக்னேஸ்வரன்!

Pagetamil

Leave a Comment