ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களை விரைவாக நாட்டுக்கு வெளிப்படுத்தும் திறன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நீதித்துறை எப்போதும் சுதந்திரம் மற்றும் இரகசியத்தன்மையை பாதுகாக்கும் வகையில் செயற்படுவதால் அவருக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஸ்திரப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் மேலும் நம்பிக்கை வைப்பதன் மூலம் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்கு செல்லாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது கட்டியெழுப்பப்பட்டு வரும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை தேர்தலுக்கான மக்கள் தீர்மானங்களை எடுப்பதன் மூலம் அழிக்கப்பட்டால், மீண்டும் பொருளாதார ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்ப பதினைந்து வருடங்களுக்கு மேலாகும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.