Site icon Pagetamil

மைத்திரியிடம் விசாரணைக்கு உத்தரவு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால், பொலிஸ் மா அதிபருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌியிட்ட கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ளது.

குறித்த கருத்து தொடர்பில் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவினால் இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டிருந்தது.

Exit mobile version