30.1 C
Jaffna
April 23, 2024
தமிழ் சங்கதி

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக செயற்பட்டதால் கடல் கடக்க அனுமதிக்க முடியாது: வி.மணிவண்ணனின் கோரிக்கையை நிராகரித்த பாதுகாப்பு அமைச்சு!

திருகோணமலையை சேர்ந்த ஹரிகரன் தன்வந்த் அண்மையில் பாக்கு நீரிணையை நீந்திக்கடந்திருந்தார். சில நாட்களாக அவரை பாராட்டுபவர்கள் பற்றிய விபரங்கள் சமூக ஊடகங்களில் நிறைந்திருந்தது.

13 வயதான தன்வந்த், இளவயதில் பாக்கு நீரிணையை நீந்தி கடந்துள்ளார்.

பாக்கு நீரிணையை முதலில் நீந்திக்கடந்த தமிழர் வல்வெட்டித்துறையை சேர்ந்த மு.நவரத்தினசாமி. 1954 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி பாக்கு நீரிணையை நீந்திக் கடந்தபோது, அவருக்கு வயது 44.

அதன் பின்னர் 1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி வல்வெட்டித்துறையை சேர்ந்த நீச்சல் வீரரான ஆழிக்குமரன் என்று அழைக்கப்படும் குமார் ஆனந்தன்  தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடிக்கு நீந்திசட சென்று, மீண்டும் தலைமன்னாருக்கு நீந்தி வந்தார். அப்போது அவருக்கு வயது 18.

அதன் பின்னர், வேறு பலரும் பாக்கு நீரிணையை நீந்திக்கடந்துள்ளனர். இப்போது, 13 வயதான ஹகரிகன் தன்வந்த் பாக்கு நீரிணையினைக் கடந்து சாதனை படைத்துள்ளார்..

அவரது தந்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக செயற்பட்டவர். பின்னர், கட்சி செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி விட்டார். இப்போது, மணிவண்ணன் தரப்புடன் நெருக்கமாக இருக்கிறார்.

தன்வந்த் பாக்கு நீரிணையை நீந்திக்கடந்தது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதையொட்டி நடந்த இரண்டு தெரியாத விடயங்களை குறிப்பிடவுள்ளோம்.

தன்வந்த் பாக்கு நீரிணையை நீந்திக்கடப்பதற்கான நீச்சல் பயிற்சியை ஒரு சிங்கள நீச்சல் ஆசிரியரிடமே பெற்றார். இதற்கான பயிற்சியளிக்கக்கூடிய தமிழ் நீச்சல் ஆசிரியர் ஒருவரை தன்வந்த் குடும்பத்தினால் கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கலாம். பாக்கு நீரிணையை நீந்திக்கடந்தவர்கள், கப்பலோட்டிய தமிழர்கள் என்றெல்லாம் பழம் பெருமை பேசும் நமது சமூகம், தொழில் திறனில் எவ்வளவு பலவீனமானது என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம்.

தன்வந்த் பாக்கு நீரிணையை நீந்திக்கடப்பதற்கான பயற்சியை பெற்றுக் கொண்டிருந்த போது, தமது கட்சியின் முன்னாள் அமைப்பாளரின் மகன் என்ற ரீதியிலோ என்னவோ, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அங்கு சென்றுள்ளார். மாணவனை ஊக்கப்படுத்தி விட்டு வந்த கஜேந்திரகுமார், பின்னர் தன்வந்த் குடும்பத்தாருடன் தொலைபேசியில் பேசும் போது, தமிழ் நீச்சல் ஆசிரியரிடம் பயிற்சிக்கு அனுப்ப முடியாதா என கேட்டுள்ளார்.

இந்த தகவலை அறிந்தால், சமூக ஊடகங்களில் உள்ள முன்னணி எதிர்ப்பாளர்கள், கஜேந்திரகுமார் யாழ்ப்பாணத்தில் வீடு கட்ட சிங்கள நிர்மாண நிறுவனத்தை அமர்த்தலாம், சாதாரண மாணவன் சிங்கள ஆசிரியரிடம் பயிற்சி பெற முடியாதா என அறச்சீற்றமடையலாம். ஆனால், நாம் அதை குறிப்பிடவில்லை. தமிழ் சமூகத்தின் இருப்பிற்கான போராட்டம் என எப்பொழுதும் எதிர்ப்பு போராட்டங்களில் மட்டும் ஈடுபடாமல், அதற்கு சமாந்தரமாக தமிழ் சமூகத்தை பலமான சமூகமாக மாற்ற என்ன செய்ய வேண்டுமென்பதையும் முன்னணி சிந்திக்க வேண்டும்.

தன்வந்த்தின் நீச்சலுடன் தொடர்புடைய மற்றொரு சம்பவம் இன்னும் சுவாரஸ்யமானது.

தன்வந்தின் தந்தை தற்போது, மணிவண்ணன் தரப்புடன் நெருக்கமானவர். தன்வந்த் இந்தியாவிலிருந்து நீந்நத் தொடங்கியதும், அவரை உற்சாகமூட்டியபடி கூடவே படகில் வருவதற்கு மணிவண்ணனும், யாழ் மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் வ.பார்த்தீபனும் விரும்பியுள்ளனர். இதற்காக இலங்கை பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பம் செய்துள்ளனர்.

அவர்களது கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்து விட்டது. ஏன் அந்த கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என குறிப்பிட்டு, பாதுகாப்பு அமைச்சு அவர்களுக்கு கடிதமும் அனுப்பியுள்ளது. 4 காரணங்களின் அடிப்படையில் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ள 4வது காரணம்- தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு நிகழ்வில் கலந்து கொண்டது.

3வது காரணம்- நல்லூரில் மாவீரர்தினத்தையொட்டி மாவீரர்களின் பெயர் பட்டியலை காட்சிப்படுத்தியமை.

2வது காரணம்- தியாகி திலீபனின் நினைவு நிகழ்வை ஒழுங்கமைத்ததை.

1வது காரணம். 2020 பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்ட மணிவண்ணன், பின்னர் கட்சிக்கு எதிராக செயற்பட்டு, கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

visvalingam manivannan contested as a tamil national people’s front candidate in the general election held in 2020. during the election campaign, he worked against the party secretary, resulting in his subsequent removel from membership என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலையும் தமிழ் சமூகம் எவ்வாறு கையாளும் என்பது தெரியவில்லை. மஹிந்த தரப்பின் பி ரீம் தான் முன்னணி, அதனால்தான் முன்னணிக்கு எதிராக செயற்பட்ட மணிவண்ணனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என அர்த்தம் கற்பிக்க முனையலாம். ஆனால், அதை கடந்த ஆழமான அர்த்தம் அதில் உள்ளது. கட்சிக்கு எதிராக திரும்புவதை அறவுணர்ச்சிக்கு எதிரான ஒரு செயலாக கடிதம் சித்தரித்திருக்கலாம்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
1
+1
1

இதையும் படியுங்கள்

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் சிறிதரனை மௌனமாக்கியது எது?

Pagetamil

வெடுக்குநாறிமலை அட்டூழியம்: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்ட முஸ்தீபு!

Pagetamil

‘திருகோணமலை குழப்பத்துக்கு முடிவில்லாமல் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த வேண்டாம்’: தமிழ் அரசு கட்சியின் தலைமைக்கு இரா.சம்பந்தன் மீண்டும் அறிவித்தல்!

Pagetamil

‘எனது ஆதரவாளர்கள் புறமொதுக்கப்படுகிறார்கள்’: சுமந்திரனை தடுப்பது உத்தியா?; சம்பந்தனின் புகாரின் பின்னணி!

Pagetamil

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமை போட்டிக்கு 3 பேர் விண்ணப்பம்: திடீர் குழப்பத்தால் மீண்டும் கூடுகிறது மத்தியகுழு!

Pagetamil

Leave a Comment