29.7 C
Jaffna
April 14, 2024
சினிமா

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் திருமண புகைப்படங்கள்!

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

கன்னடத்தில் வெளியான கில்லி திரைப்படம் மூலம் 2009ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் நடித்த அவர், தமிழில் தடையற தாக்க மூலம் அறிமுகம் ஆனார். தொடர்ந்து என்னமோ ஏதோ, தீரன் அதிகாராம் ஒன்று, தேவ், என்ஜிகே, அயலான் ஆகிய படங்களில் நடித்திருந்தார். ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் இவர் நடித்து இருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங், தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானி என்பவரை காதலித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பே தங்களது திருமணம் பற்றி அறிவித்திருந்தார் ரகுல் ப்ரீத் சிங். இந்நிலையில் தற்போது கோவாவில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். கோவாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் பாலிவுட் திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக தங்களது திருமணத்தை வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று கோவாவில் மாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. ரகுல் ப்ரீத் சிங்கின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விஜய் குரலில் ‘தி கோட்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் புரொமோ வீடியோ

Pagetamil

திகிலூட்டும் காட்சிகள்… அறிவழகன் – ஆதி கூட்டணியில் ‘சப்தம்’ டீசர்

Pagetamil

“ஆர்.எம்.வீரப்பன் ஒருபோதும் பணத்துக்கு பின்னால் சென்றவரில்லை” – ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

Pagetamil

பாஜகவில் இணைந்த நகைச்சுவை நடிகை ஆர்த்தி

Pagetamil

ப்ளாக்பஸ்டர் “பிரேமலு”, ஏப்ரல் 12, 2024 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்!

Pagetamil

Leave a Comment