30.1 C
Jaffna
April 23, 2024
கிழக்கு

மட்டக்களப்பில் சவப்பெட்டியுடன் உண்ணாவிரதம்!

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனிடமிருந்து பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பதவி பறிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு, செங்கலடி பிரதேச செயலகத்துக்கு அருகாமையில் சிலர், சவப்பெட்டிகளுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கனிய அகழ்வோர் சிலரே சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாளேந்திரனின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு ஆளாகாமல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், செங்கலடி பிரதேச செயலாளரும் சட்டப்படி தமது கடமைகளை புரியுமாறு கோரி சவப்பெட்டிகளுடன் அமர்ந்து சாகும் வரை உண்ணா விரதபோராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்

கருங்கல், மணல், கிறவல் என்பவற்றுக்கு சட்டப்படியான ஆவணம் இருந்தும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாளேந்திரன் சிபாரிசு செய்யும் நபர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்குமாறு கூறியுள்ளதாகவும், இராஜாங்க அமைச்சர் வியாளேந்திரனை ஏறாவூர் பற்று பிரதேச தலைவர் பதவியில் இருந்து அகற்றுமாறும் போராட்டக் காரர்கள் தெரிவித்தனர்.

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளரை தனித்து இயங்க விடாது தனது அதிகாரத்தினை கொண்டு கட்டுப்படுத்தியுள்ளதாகவும், தங்களது அனுமதி பத்திரத்தினை புதுப்பித்து தருவதாக இருந்தால் இராஜாங்க அமைச்சரை அவரின் தனிப்பட்ட அலுவலகத்திற்கு சென்று சந்திக்க வேண்டும் எனவும், தான் வழங்கும் பெயர்களை உடைய நபர்களுக்கு மாத்திரம் தான் அனுமதி பத்திரம் புதுப்பித்து வழங்க வேண்டும் எனவும் பிரதேச செயலாளரை கட்டயப்படுத்தியுள்ளதாகவும் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில்- இராஜாங்க அமைச்சரின் பொருளாதாரம் கடந்த பத்து வருடங்களுக்கு முன் எப்படி இருந்தது என்றும், இன்று அவரின் பொருளாதாரம் எவ்வாறு உள்ளது என்பதையும் பார்க்க முடியும் என்றும், தனது பிள்ளைகளை வெளிநாட்டில் கல்வி கற்பிப்பதாகவும் தங்களது வாழ்வாதாரத்தினை முடக்கி தனது வாழ்வாதாரத்தினை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

போதைப்பொருட்களுடன் கைதான கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர்

Pagetamil

வாகரையில் மக்கள் போராட்டம்

Pagetamil

திருகோணமலையில் இளம் யுவதியின் உயிரைப்பறித்த சாரதி தப்பியோட்டம்!

Pagetamil

வாழைச்சேனையில் இருவர் பலி

Pagetamil

புலிகள் கடத்தல்காரர்கள்: உலமா கட்சி தலைவர் உளறல்!

Pagetamil

Leave a Comment