29.7 C
Jaffna
April 14, 2024
மலையகம்

தாயையும், மகளையும் வன்புணர்ந்து கொன்றவருக்கு மரணதண்டனை!

இரத்தினபுரி, கொட்டகெதன பிரதேசத்தில் தாயையும் மகளையும் வல்லுறவுக்குள்ளாக்கி கொன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியான ‘செயின் கில்லர்’ நீல் லக்ஸ்மனுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இன்று (19) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

நீதிமன்றில் எரிந்து கொண்டிருந்த மின் விளக்குகளை அணைத்துவிட்டு, பிரதிவாதிக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி, வெலிக்கடை சிறைச்சாலையில் ஜனாதிபதியால் நிர்ணயிக்கப்படும் ஒரு நாள் மற்றும் நேரத்தில் சாகும்வரை அவரை தூக்கில் தொங்கவிடுமாறு உத்தரவிட்டார்.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீதிமன்றில் 147 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை அறிவித்த நீதிபதி, தீர்ப்பில் கையெழுத்திட்ட பின் பேனாவை உடைத்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபத்தில் இரண்டு பெண்கள் பலி

Pagetamil

ஒருவர் குத்திக்கொலை

Pagetamil

தம்பியை கொலை செய்த கொடூர அண்ணன்!

Pagetamil

வாகனம் கவிழ்ந்து 7 பேர் காயம்!

Pagetamil

பேருந்து விபத்து!

Pagetamil

Leave a Comment