29.7 C
Jaffna
April 14, 2024
மலையகம்

சிறு வயதிலிருந்து யுவதியை மிரட்டி பணம் பறித்த தம்பதிக்கு பிணை!

23 வயது யுவதியை ஐந்து வருடங்களாக அவ்வப்போது மிரட்டி கப்பம் பெற்ற தனியார் பாடசாலை பேருந்து ரிமையாளரான கணவன் மற்றும் மனைவிக்கு தலா 4 இலட்சம் ரூபா சரீரப் பிணை வழங்க கம்பளை பதில் நீதவான் நந்தனி காந்திலதா உத்தரவிட்டார்.

கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடஹெந்தென்ன கெமுனு புர பகுதியைச் சேர்ந்த சந்திம துஷாரி ஹெந்தெனிய மற்றும் சுதர்சன் வீரவன்ச ஆகியோருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கம்பளை பொலிஸாரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் உடஹெந்தென்ன மெதகொட பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான கரிகா ரணசிங்க மற்றும் அவரது தந்தை சாந்த ரணசிங்க ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகினர்.

இவர்கள் அவ்வப்போது யுவதியை தாக்கி கப்பம் பெற்று வருவதாகவும், கடந்த முறை கம்பளை நகரில் ஐம்பதாயிரம் ரூபா பணம் கேட்டு தர தாமதம் ஆனதாக கூறி இந்த யுவதியை இந்த பஸ்சில் பெண் கடுமையாக தாக்கியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் யுவதி காயமடைந்து கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவரது முகம், உதடுகள், கைகள் மற்றும் உடலிலும் காயமேற்பட்டுள்ளது.

கம்பளை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரையின் பேரில் குறித்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 வயதான இந்த பெண் கம்பளை புனித ஜோசப் பெண்கள் பாடசாலையில் கல்வி கற்றுள்ளார். சந்தேகத்திற்குரிய தம்பதிக்குச் சொந்தமான பாடசாலை பேருந்தில் அவர் உடஹேந்தென்ன மெதகொடவிலிருந்து கம்பளை புனித ஜோசப் பெண்கள் பாடசாலைக்கு வந்துள்ளார்.

இந்தப் பெண்ணின் தந்தைக்கு பேக்கரி, மளிகைக் கடை, எரிவாயுக் கடை, தேயிலைத் தோட்டங்கள் உள்ளிட்ட பல வர்த்தக இடங்கள் உள்ளன. அவரது மகளுக்கு தாராளமாக பணம் கொடுத்த வந்துள்ளார்.

இந்தப் பேருந்தில் இருந்த பெண், பாடசாலைக்குச் செல்லும் காலம் முதல் இந்த யுவதியிடம் பணம் பறித்ததாகவும், பாடசாலைக்காலம் முடிந்து, தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் போது மிரட்டி பணம் எடுத்ததாக போலீஸில் கூறியதாக கூறப்படுகிறது.

யுவதியின் வசிப்பிடத்தின்படி அவர் குருந்துவத்தை பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர் எனவும், கல்வி மற்றும் தொழில் அடிப்படையில் கம்பளை பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த பெண் மற்றும் அவரது கணவரிடமிருந்து துன்புறுத்தல் மற்றும் கப்பம் கோரல் குறித்து அவர் முதலில் குருந்துவத்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார், பின்னர் கம்பளையில் கடந்த 11 நாட்களுக்கு முன்பு கம்பளைப் பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

மேலும், கம்பளை பொலிஸாரின் ஆலோசனையின் பேரில், அவரும் அவரது தந்தையும் மீண்டும் குருந்துவத்தை பொலிஸில் கப்பம் கோருவது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த முறைப்பாட்டில், தம்பதியினர் அவ்வப்போது தன்னிடம் இருந்து பதினைந்து இலட்சம் ரூபா கப்பம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தை அவ்வப்போது கொடுத்த பணம், வேலையில் கிடைத்த சம்பளம், தங்க நகையை விற்ற பணம், மூன்றாமாண்டு படிக்கும் வெளிநாட்டில் நடந்த போட்டியில் பங்கேற்றது போக மிச்சம் வந்த பணத்தை இந்த தம்பதிக்கு வழங்கியதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த பெண் தனது வங்கி புத்தகத்தில் இருந்து பணத்தை எடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுவதியை தாக்கிய சம்பவம் தொடர்பிலான விசாரணையை எதிர்வரும் ஜுலை மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்த கம்பளை நீதிமன்றம், கப்பம் கோரும் சம்பவத்தை குருந்துவத்தை பொலிஸார் சமரச சபைக்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இச்சம்பவத்தால் இந்த இளம்பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்

அவர் மன அழுத்தத்தில் இருப்பதாகவும், வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டில் இருப்பதாகவும் அவருடைய தந்தை கூறுகிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபத்தில் இரண்டு பெண்கள் பலி

Pagetamil

ஒருவர் குத்திக்கொலை

Pagetamil

தம்பியை கொலை செய்த கொடூர அண்ணன்!

Pagetamil

வாகனம் கவிழ்ந்து 7 பேர் காயம்!

Pagetamil

பேருந்து விபத்து!

Pagetamil

Leave a Comment