30.1 C
Jaffna
April 23, 2024
கிழக்கு

கைதான சந்தேகநபரின் தொலைபேசியை மலிவு விலையில் விற்ற பொலிஸ்காரர் கைது!

58,000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை நபர் ஒருவருக்கு 5,000 ரூபாவிற்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அம்பாறை தலைமையக பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை பிரதேசத்தில் கடந்த ஜுலை மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற திருவிழாவின் போது திருவிழா மைதானத்தில் இடம்பெற்ற சம்பவம் காரணமாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட நபரின் கையடக்க தொலைபேசியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட கைத்தொலைபேசியை மேற்படி சந்தேகநபர் வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கையடக்கத் தொலைபேசி உரிமையாளர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அம்பாறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போதைப்பொருட்களுடன் கைதான கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர்

Pagetamil

வாகரையில் மக்கள் போராட்டம்

Pagetamil

திருகோணமலையில் இளம் யுவதியின் உயிரைப்பறித்த சாரதி தப்பியோட்டம்!

Pagetamil

வாழைச்சேனையில் இருவர் பலி

Pagetamil

புலிகள் கடத்தல்காரர்கள்: உலமா கட்சி தலைவர் உளறல்!

Pagetamil

Leave a Comment