25.3 C
Jaffna
February 21, 2024
மலையகம்

நுவரெலியா வைத்தியசாலையில் சிற்றுண்டிச்சாலைக்கு சீல்

சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்களிற்கான சிற்றுண்டிச்சாலையை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக நுவரெலியா மாநகர சபையின் பிரதான மாநகர சுகாதார பரிசோதகர் கித்சிறி ஹேரத் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாநகரசபையின் சுகாதார பரிசோதகர்கள் நேற்று (12) நடாத்திய அவசர பரிசோதனையின் போது நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இயங்கி வரும் வைத்தியர்களின் சிற்றுண்டிச்சாலை மனித பாவனைக்கு லாயக்கற்ற முறையில் இயங்கி வருவது அவதானிக்கப்பட்டது.

இந்த அவசர பரிசோதனையில், நுவரெலியா மாநகரசபையின் சுகாதார பரிசோதகர்கள் மற்ற எட்டு உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக மனித பாவனைக்கு லாயக்கற்ற உணவுகளை விற்பனை செய்தமை, அசுத்தமான முறையில் உணவு தயாரித்தல், முறையான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாமை, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமை ஆகிய காரணங்களின் கீழ் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

மேலும், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினால் நடத்தப்படும் வைத்தியர்களுக்கான சிற்றுண்டிச்சாலையை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் குறைபாடுகளை நிவர்த்தி செய்து மாநகர சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருமாறும் அவர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன்!

Pagetamil

குளவி கொட்டி 73 மாணவர்கள் பாதிப்பு!

Pagetamil

தாயையும், மகளையும் வன்புணர்ந்து கொன்றவருக்கு மரணதண்டனை!

Pagetamil

சிறு வயதிலிருந்து யுவதியை மிரட்டி பணம் பறித்த தம்பதிக்கு பிணை!

Pagetamil

லொறி கவிழ்ந்து ஒருவர் பலி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!