25.3 C
Jaffna
February 21, 2024
இந்தியா

சாந்தனுக்கு இலங்கை துணைத் தூதரகம் தற்காலிக பயண ஆவணம் வழங்கல்: தமிழக அரசு தகவல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான சாந்தன் தாயகம் திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணைத் தூதரகம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்த நளினி, முருகன், சாந்தன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்து, கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட இலங்கை நாட்டை சேர்ந்தவர்களான முருகன், சாந்தன் உள்ளிட்டோர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சாந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் சாந்தனுக்கு இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை தூதரகம் வழங்கியுள்ளது. அந்த ஆவணங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அப்போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இதுவரை தங்களுக்கு அந்த ஆவணங்கள் கிடைக்கவில்லை. எனவே, தற்போது நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பதாக தெரிவித்தார். அதனடிப்படையில், சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்

இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பெப்ரவரி 29ஆம் திகதிக்கு தள்ளிவைத்தனர்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி – தேர்தல் அதிகாரி மீது வழக்குப் பதிய உத்தரவு

Pagetamil

பெற்றோர் பெண் பார்க்காததன் எதிரொலி: முச்சக்கர வண்டியில் சுயவிபரங்களை பகிர்ந்து மணமகள் தேடும் இளைஞன்!

Pagetamil

எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

Pagetamil

கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்போம்: ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் எச்சரிக்கை

Pagetamil

முதலிரவில் அளவுக்கு அதிகமாக வயக்கரா மாத்திரை உட்கொண்டு விட்டு பாய்ந்த மணமகன்: மணமகள் பலி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!