27.5 C
Jaffna
February 21, 2024
விளையாட்டு

மக்ஸ்வெல் மரண அடி: ரி20 போட்டிகளில் 5வது சதம்!

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக 2வது ரி20 போட்டியில் அவுஸ்திரேலிய சகலதுறை வீரர் கிளென் மக்ஸ்வெல் சதமடித்தார். ரி20 போட்டிகளில் அவரது 5வது சதமாகும்.

மேற்கிந்தியத்தீவுகள் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என அவுஸ்திரேலியா கைப்பற்றியது.

தற்போது 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது ரி20 போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணிக்கு மக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். மேற்கிந்தியத்தீவுகள் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய மக்ஸ்வெல் 55 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 8 சிக்சர்களுடன் 120 ரன்கள் குவித்து அசத்தினார். இறுதி கட்டத்தில் அவருடன் ஜோடி சேர்ந்த டிம் டேவிட்டும் அதிரடியாக விளையாடினார். 14 பந்துகளை சந்தித்த டிம் டேவிட் அதில் 31 ரன்கள் குவித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அவுஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 241 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மேற்கிந்தியத்தீவுகள் ஆடி வருகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் மக்ஸ்வெல் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் ரோகித் சர்மாவுடன் ( 5 சதம் ) தற்போது மக்ஸ்வெல்லும் (5 சதம்) இணைந்துள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக சூர்யகுமார் யாதவ் ( 4 சதம்), பாபர் ஆசம் (3 சதம்), காலின் முன்ரோ (3 சதம்) ஆகியோர் உள்ளனர்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முதலாவது ரி20 போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இலங்கை!

Pagetamil

‘கிரிக்கெட் அனைவருக்குமான விளையாட்டு’ – குறிப்பால் உணர்த்திய சர்பராஸ் கானின் தந்தை

Pagetamil

266 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது ஆப்கானிஸ்தான்

Pagetamil

‘திருமணமான 3 மாதத்தில் பிரச்சினை’: தந்தையின் குற்றச்சாட்டும், ரவீந்திர ஜடேஜா பதிலும்

Pagetamil

ஆப்கான் அணிக்கு எதிரான ரி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!