26.3 C
Jaffna
February 26, 2024
இலங்கை

போதைப்பொருளை விற்பவர்களை மட்டுமல்ல… கொடுப்பவர்களையும் கைது செய்ய வேண்டும்: பொலிசாரை எச்சரித்த நீதிபதி!

பாடசாலை மாணவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்கும்  போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ஒழுங்கமைக்கப்பட்ட செயற்பாடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு மாளிகாகந்த பிரதான நீதவான் திருமதி லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க பொலிஸ் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

அபின் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மாவா எனப்படும் போதைப்பொருள் பாடசாலை மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் முதல் நடவடிக்கை என சுட்டிக்காட்டிய நீதவான், நாட்டின் எதிர்காலமாக விளங்கும் பாடசாலை மாணவர்களை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

மோதர, மட்டக்குளி, மருதானை போன்ற பிரதேசங்களைச் சுற்றி அபின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மாவா என்ற போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் பிரதிவாதிகள் பலர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் பொலிஸாருக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சில விற்பனையாளர்கள் மாத்திரமே பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதவான், உண்மையான கடத்தல்காரர்களை கைது செய்வதற்கு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு எச்சரித்தார்.

போதைப்பொருள் விற்பனைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரனை செய்த நீதவான், போதைப்பொருள் விற்பனைக்கு யார் கொடுத்தார்கள் என வினவியதுடன், சந்தேகநபர்களிடம் உண்மையை வெளிப்படுத்தி விசாரணைகளை மேற்கொண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யுமாறு அறிவுறுத்தினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாணவியின் நிர்வாண படங்கள் சமூக ஊடகங்களில்: ஆணைப் போல நடித்து நிர்வாண படங்களை கறந்த 19 வயது யுவதி கைது!

Pagetamil

தாய் உயிரிழந்த செய்தியை கேட்டதும் மகனின் உயிரும் பிரிந்தது!

Pagetamil

யாழ் மரதன்

Pagetamil

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க- சமத்துவ கட்சி தலைவர் சந்திரகுமார் சந்திப்பு

Pagetamil

மார்ச் மாதம் முதல் இலங்கைக்குள்ளேயே சிறுபான்மையினராகும் இலங்கையர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!