25.3 C
Jaffna
February 21, 2024
இலங்கை

வவுனியாவில் நடந்த கொடூர சம்பவம்: சிவசேனை பிரமுகர் கைது!

வவுனியாவில் விலங்குகளை வேட்டையாட  பொருத்தப்பட்ட சட்டவிரோத மின்பொறியில் சிக்கி யானை உயிரிழந்தது. இந்த சம்பவம் இடம்பெற்ற பண்ணையின் உரிமையாளரான சிவசேனை அமைப்பின் பிரமுகர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

வவுனியாவிலுள்ள தம்பா பண்ணையில் நேற்று முன்தினம் அதிகாலை யானை இறந்ததாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, யானையொன்று உயிரிழந்திருந்தது.

தம்பா பண்ணையின் உரிமையாளரும், அங்கு பணியாற்றிய ஊழியர் ஒருவரும் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஊழியரிடம் நிலத்தை குத்தகைக்கு வழங்கி விட்டதாகவும், அந்த இடத்தில் நடந்த சம்பவத்துக்கும் தனக்கும் தொடர்பில்லையென பண்ணை உரிமையாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், நிலத்தை குத்தகைக்கு கொடுத்த ஆவணமொன்றையும் சமர்ப்பித்தார்.

எனினும், ஊழியர் அதை மறுத்து விட்டார். தான் சிங்கள மொழி பேசுபவன் என்றும், ஆவணத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது தெரியாதென்றும், யானை இறந்ததும் அவசரஅவசரமாக பண்ணை உரிமையாளர் இந்த ஆவணத்தை தயார் செய்து தன்னிடம் கையொப்பம் வாங்கியதாகவும், தான் அந்த பண்ணையில் மத சம்பளத்தில் பணியற்றுபவன் என்றும் ஊழியர் குறிப்பிட்டார்.

இருவரும் நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவிருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ். பல்கலைக் கழக முகாமைத்துவ பீடத்தில் தொழில் வாய்ப்புச் சந்தை

Pagetamil

கரைச்சி பிரதேசசபைக்கு புதிய செயலாளர்

Pagetamil

தமிழ் அரசு கட்சிக்கு எதிரான வழக்குகளில் எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாக முடியாது; தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளும் விளையாட்டு: ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா!

Pagetamil

இராமநாதன் அரங்காற்றுகை மாணவர்கள் போராட்டம்

Pagetamil

யாழில் இந்திய துணைத்தூதரகத்தை முற்றுகையிட முயன்ற கடற்றொழிலாளர்கள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!