25.3 C
Jaffna
February 21, 2024
இலங்கை

முதலாளிகள் தப்பியோடியதால் ஜோர்டானில் நிர்க்கதியான 66 இலங்கையர் நாடு திரும்பினர்

ஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளின் முதலீட்டாளர்கள் ஊழியர்களுக்கு அறிவிக்காமல் காணாமல் போனதன் காரணமாக தொழிற்சலைகள் மூடப்பட்டதுடன், நிராதரவான அந்த தொழிற்சாலைகளின் 66 ஊழியர்கள் இன்று (09) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

ஜோர்டானில் அசில், ஹை அப்பேரல் என பெயரிடப்பட்ட இந்தத் தொழிற்சாலைகளை நடத்தி வந்த இந்திய முதலீட்டாளர்கள் யாருக்கும் தெரிவிக்காமல் தப்பிச் சென்றதால், அங்கு பணிபுரிந்த இலங்கை, பங்களாதேஷ், இந்திய, நேபாளத் தொழிலாளர்கள் சம்பளம், உணவு, தண்ணீர், மின்சாரம் இல்லாமல் நிர்க்கதியாகியுள்ளனர்.

இத்தொழிற்சாலைகளில் இருந்து ஜாக்கெட், டீ ஷர்ட்களை வாங்கிய அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து அவர்கள் சொந்த நாட்டுக்கு செல்லும் வரை உதவி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இத்தொழிற்சாலைகளில் பணிபுரிந்த இலங்கையர்களுக்கு, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவை இணைந்து தலையிட்டு ஜோர்தானிய தொழிலாளர் திணைக்களத்துடன் இணைந்து நிபுணத்துவ சட்டங்களை வழங்கியுள்ளன.

இன்று (09) அதிகாலை குவைத்தில் இருந்து ஜசீரா ஏர்லைன்ஸ் விமானத்தில் 61 பேரும், தோஹாவிலிருந்து கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் 5 பேரும் ன்று நாட்டை வந்தடைந்தனர்.

அத்துடன், ஜோர்தானில் மூடப்பட்ட தொழிற்சாலையில் பணியாற்றிய எஞ்சிய இலங்கையர்களையும் அடுத்த இரண்டு நாட்களில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்ப ஜோர்தானிலுள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும், துபாயிலிருந்து தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 17 இலங்கை வீட்டுப் பணியாளர்களும் இன்று (09) காலை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 இல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0

இதையும் படியுங்கள்

யாழ். பல்கலைக் கழக முகாமைத்துவ பீடத்தில் தொழில் வாய்ப்புச் சந்தை

Pagetamil

கரைச்சி பிரதேசசபைக்கு புதிய செயலாளர்

Pagetamil

தமிழ் அரசு கட்சிக்கு எதிரான வழக்குகளில் எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாக முடியாது; தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளும் விளையாட்டு: ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா!

Pagetamil

இராமநாதன் அரங்காற்றுகை மாணவர்கள் போராட்டம்

Pagetamil

யாழில் இந்திய துணைத்தூதரகத்தை முற்றுகையிட முயன்ற கடற்றொழிலாளர்கள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!