26.2 C
Jaffna
February 22, 2024
இலங்கை

நடிகை தமன்னா, நகைச்சுவை நடிகர் யோகி பாபு குழுவினர் யாழ் வந்தனர்!

நடிகை தமன்னா, நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு புகழ் உள்ளிட்டவர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ள நிலையில் தென்னிந்திய கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.

குறித்த குழு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.

குறித்த இசைநிகழ்ச்சியை முன்னிட்டு பாடகர் ஹரிஹரன், நடிகை ரம்பா, நடன இயக்குனர் கலா மாஸ்டர், நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா , நந்தினி, மகா லட்சுமி
உள்ளிட்ட பல கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்வி நிறுவனமொன்றின் விளம்பரத்துக்காக தென்னிந்திய திரைப்படத்துறையினர் அழைத்து வரப்பட வேண்டுமா என்ற பரவலான கேள்வியெழுத்திருந்த நிலையில், அவர்களுடன் புகைப்படம் எடுக்க 30000 ரூபா கட்டணம் அறவிடுவதாக நிறுவனம் அறிவித்திருந்தது அவர்களின் வர்த்தக நோக்கத்தை புலப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பல்கலைக்கழக மாணவன் மரணத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சித் திருப்பங்கள்: கூலிப்படை தாக்குதல் முயற்சியா?

Pagetamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் ஆர்.ஆர் காலமானார்!

Pagetamil

புது திருப்பம்: வீடு புகுந்து தாக்கி விட்டு வரும் போதே யாழ் பல்கலை மாணவன் விபத்தில் இறந்தார்… ஒரு தலை காதல் காரணமா?; அதிர வைக்கும் சிசிரிவி காட்சிகள்!

Pagetamil

விபத்தில் உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் விவகாரத்தில் திடீர் திருப்பம்: வீடு புகுந்து தாக்கி விட்டு வரும்போதே விபத்து!

Pagetamil

காதலர் தினத்தன்று மனைவிக்கு பரிசளிக்க நகை திருடிய இளைஞன் கைது: யாழில் சம்பவம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!