Pagetamil
இலங்கை

பழைய இரும்பு சேகரிக்கும் இடத்தில் வெடிப்பு: ஒருவர் பலி!

அவிசாவளை மாதொல பிரதேசத்தில் பழைய இரும்புகளை சேகரிக்கும்  நிலையத்தில், செவ்வாய்க்கிழமை (06) பிற்பகல் இடம்பெற்ற வெடிப்பில், மஸ்கெலியாவைச் சேர்ந்த 49 வயதான நபரொருவர் மரணமடைந்துள்ளார்.

அந்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த அந்த நபர், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

மற்றுமொரு நபருடன் இணைந்து பழைய இரும்புகளை சேகரித்துக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மரணமடைந்தவரின் சடலம், அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும், குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணையாளர்கள் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினர் ஸ்தலத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

பிள்ளையானிடம் நடத்தப்படும் விசாரணையில் பல தகவல்கள் வெளிப்படுகிறது!

Pagetamil

மாத்தறை சிறைச்சாலையில் களேபரம்: கண்ணீர்ப்புகை வீச்சு!

Pagetamil

துப்பாக்கிச்சூட்டில் டான் பிரியசாத் உயிரிழக்கவில்லை!

Pagetamil

துப்பாக்கி இயங்காததால் தப்பித்த வர்த்தகர்: துப்பாக்கிதாரி மடக்கிப் பிடிப்பு!

Pagetamil

முழு உலகத்துக்குமான ஆன்மீக தலைவராக பணியாற்றியவர் பாப்பரசர்

Pagetamil

Leave a Comment