Pagetamil
இலங்கை

வட்டுக்கோட்டை பொலிசாரிடமிருந்து காப்பாற்றுங்கள்… பல்கலை மாணவன் மனித உரிமை ஆணைக்குழுவில் தஞ்சம்

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கடுமையான தாக்குதலுக்குள்ளானதாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவன் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில், தனது உயிரை காப்பாற்றுமாறு தஞ்சம் அடைந்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றதாக பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வட்டுக்கோட்டை கோட்டைக்காடு பகுதியினை சேர்ந்த கருணாகரன் நிதர்ஷன் எனும் 27 வயதான இளைஞனே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார்.

போக்குவரத்து விதிமீறல் குற்றச்சாட்டில் சிவில் உடையணிந்த பொலிசார் வீதியில் வைத்து தன்னை தாக்கியதாகவும், பின்னர் பொலிஸ் நிலையம் கொண்டு சென்று சிறிய அறைக்குள் வைத்து தாக்கியதாகவும் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சில மாதங்களின் முன்னர் சித்தங்கேணியை சேர்ந்த இளைஞன் ஒருவரை அடித்து கொன்ற குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிசார் சிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

மாகாண கல்விப் பணிப்பாளரின் அறிவித்தலுக்குப் பின்னரும் நடவடிக்கை எடுக்காத வலயக் கல்வித் திணைக்களம்

Pagetamil

நிதி மோசடி குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது!

Pagetamil

பிள்ளையானின் சாரதியும் கைது!

Pagetamil

ஒன்றரை வயது குழந்தைக்கு எமனாகிய தந்தையின் டிப்பர்… கிளிநொச்சியில் துயரம்!

Pagetamil

இணையப் பாதுகாப்பு சட்டமூலத்தை இரத்து செய்வதற்கான வர்த்தமானி

Pagetamil

Leave a Comment