26.2 C
Jaffna
February 22, 2024
இலங்கை

பன்றிவெடியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!

பன்றி வெடிக்கு சிக்கி படுகாயமடைந்த ஒருவர் சிகிக்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவாளன் பட்ட முறிப்பு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

தேன் எடுப்பதற்காக குறித்த நபரும் மேலும் சிலரும் காட்டுக்கு சென்றுள்ளனர். இதன்போது பன்றிக்காக வைக்கப்பட்ட வெடியில்
சிக்கி குறித்த நபர் படுகாயமடைந்தார்.

சம்பவத்தில், படுகாயம் அடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் மணவாளன் பட்ட முறிப்பு பகுதியை சேர்ந்த 65 வயதுடைய பழனி வடிவேல் எனும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பல்கலைக்கழக மாணவன் மரணத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சித் திருப்பங்கள்: கூலிப்படை தாக்குதல் முயற்சியா?

Pagetamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் ஆர்.ஆர் காலமானார்!

Pagetamil

புது திருப்பம்: வீடு புகுந்து தாக்கி விட்டு வரும் போதே யாழ் பல்கலை மாணவன் விபத்தில் இறந்தார்… ஒரு தலை காதல் காரணமா?; அதிர வைக்கும் சிசிரிவி காட்சிகள்!

Pagetamil

விபத்தில் உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் விவகாரத்தில் திடீர் திருப்பம்: வீடு புகுந்து தாக்கி விட்டு வரும்போதே விபத்து!

Pagetamil

காதலர் தினத்தன்று மனைவிக்கு பரிசளிக்க நகை திருடிய இளைஞன் கைது: யாழில் சம்பவம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!