தென்மராட்சி மிருசுவில் பகுதியில் தேவாலயமொன்றில் கஞ்சிக் கிடாரத்தில் விழுந்து சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று மாலை இந்த சம்பவம் நடந்தது.
தேவாலயத்தில் விசேட நிகழ்வொன்றிற்காக கஞ்சி தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்போது, மூன்றரை வயது சிறுவன் ஒருவர் தவறுதலாக கஞ்சிக் கிடாரத்துக்குள் தவறி விழுந்துள்ளார்.
அவர் உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் பேதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1