26.3 C
Jaffna
February 26, 2024
இலங்கை

உதய கம்மன்பில வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான நிறுவன பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வர்த்தகர் சிட்னி ஜயசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சாட்சிகளை ஏப்ரல் 5ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்ல முன்னிலையில் இன்று (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முதல் பிரதிவாதியான சிட்னி ஜயசிங்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ததிஸ்ஸ சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறும் கோரினார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, எதிர்தரப்பு சாட்சிகளை ஏப்ரல் 5ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

சிட்னி ஜயசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோருக்கு எதிராக அவுஸ்திரேலிய வர்த்தகரான பிரையன் ஷாடிக் என்பவருக்கு சொந்தமான பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபாவை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டி சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாணவியின் நிர்வாண படங்கள் சமூக ஊடகங்களில்: ஆணைப் போல நடித்து நிர்வாண படங்களை கறந்த 19 வயது யுவதி கைது!

Pagetamil

தாய் உயிரிழந்த செய்தியை கேட்டதும் மகனின் உயிரும் பிரிந்தது!

Pagetamil

யாழ் மரதன்

Pagetamil

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க- சமத்துவ கட்சி தலைவர் சந்திரகுமார் சந்திப்பு

Pagetamil

மார்ச் மாதம் முதல் இலங்கைக்குள்ளேயே சிறுபான்மையினராகும் இலங்கையர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!