26.2 C
Jaffna
February 22, 2024
இலங்கை

மனைவி மது அருந்தும் பழக்கத்தை மறைத்து திருமணம் செய்துவிட்டார்: யாழில் விவாகரத்து கோரும் கணவன்!

மது அருந்தும் பழக்கமிருப்பதை மறைத்து, மனைவி தன்னை திருமணம் செய்து விட்டார் என குறிப்பிட்டு கணவன் ஒருவர் விவகாரத்து கோரியுள்ளார்.

யாழ்ப்பணம், கொக்குவில் பகுதியை சேர்ந்த இளம் தம்பதியொன்றே இந்த விவகாரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த வருடம் இந்த தம்பதியினர் திருமணம் செய்துள்ளனர். 4 மாதங்களாகிய நிலையில் இப்பொழுது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

கொழும்பில் கணினி துறையில் பணியாற்றும் 27 வயதான மனைவியிடமிருந்து, 32 வயதான பொறியிலாளர் கணவர் விவாகரத்து கோரியுள்ளார்.

மனைவிக்கு மது அருந்தும் பழக்கமிருப்பது திருமணத்தின் பின்னரே தனக்கு தெரிய வந்ததாகவும், இதனால் தனது சமூக அந்தஸ்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மனைவி மது போதையில் வீட்டில் தகராறில் ஈடுபடுவதால் தனது வயதான பெற்றோர் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் விவாகரத்து மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

திருமணத்தின் பின்னர் தனது நண்பிகளுடனான விருந்தொன்றில் மது அருந்தி விட்டு போதையில் வந்ததாகவும், அது எதேச்சையான சம்பவமாக இருக்கலாமென தான் பெரிதாக எடுக்கவில்லையென்றும், எனினும், வார இறுதிகளில் நண்பிகளுடன் மது அருந்தி விட்டு போதையில் வீட்டுக்கு வருவதால் தகராறு ஏற்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மனைவியுடன் பேசி இணக்கப்பாடு எட்ட முடியவில்லையென்றும், மது அருந்துவது தனது தனிப்பட்ட உரிமையென்றும், அதில் தலையிட வேண்டாமென மனைவி கறாராக பேசுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
4
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

பல்கலைக்கழக மாணவன் மரணத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சித் திருப்பங்கள்: கூலிப்படை தாக்குதல் முயற்சியா?

Pagetamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் ஆர்.ஆர் காலமானார்!

Pagetamil

புது திருப்பம்: வீடு புகுந்து தாக்கி விட்டு வரும் போதே யாழ் பல்கலை மாணவன் விபத்தில் இறந்தார்… ஒரு தலை காதல் காரணமா?; அதிர வைக்கும் சிசிரிவி காட்சிகள்!

Pagetamil

விபத்தில் உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் விவகாரத்தில் திடீர் திருப்பம்: வீடு புகுந்து தாக்கி விட்டு வரும்போதே விபத்து!

Pagetamil

காதலர் தினத்தன்று மனைவிக்கு பரிசளிக்க நகை திருடிய இளைஞன் கைது: யாழில் சம்பவம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!