26.3 C
Jaffna
February 26, 2024
இலங்கை

கரிநாள் போராட்டங்களுக்கு தடைவிதிக்க மறுத்த யாழ் நீதிமன்றம்!

இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழ் மக்கள் போராட்டங்களை பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், போராட்டங்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி யாழ்.தலைமையகப் பொலிஸாரால் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நேற்று (2) பதில் நீதவான் தவபாலனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பொலிசாரால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்படி,

சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ்
சட்டத்தரணி நடராசா காண்டீபன்
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆரோக்கியநாதர் திலீசன்
பொன் குணரத்தினம், வலிகாமம் உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்
யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ரட்ணம் ரதீஸ்
மதியமுதன் சுகந்தினி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் யாழ்.மாவட்டத் தலைவர்
நல்லூர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் வாசுகி சுதாகர்
கலைவாணி நிரஞ்சன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் உறுப்பினர்

யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து கிளிநொச்சி பயணம் மேற்கொள்ளும் போராட்டத்தின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொது மாணவர் ஒன்றியத் தலைவர் குகதாஸ் துவாரகன் ஆகியோருக்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு பொலிசாரால் கோரப்பட்டது.

இங்கு, அடிப்படை உரிமைகளின்படி, பொதுமக்களுக்கு போராட்டம் நடத்தவும், ஆர்ப்பாட்டம் நடத்தவும் உரிமை உண்டு என்றும், போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்தால், போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பதில் நீதவான் உத்தரவிட்டார். குற்றம் நிகழும் முன் தடை உத்தரவுகளை பிறப்பிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றார்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தாய் உயிரிழந்த செய்தியை கேட்டதும் மகனின் உயிரும் பிரிந்தது!

Pagetamil

யாழ் மரதன்

Pagetamil

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க- சமத்துவ கட்சி தலைவர் சந்திரகுமார் சந்திப்பு

Pagetamil

மார்ச் மாதம் முதல் இலங்கைக்குள்ளேயே சிறுபான்மையினராகும் இலங்கையர்!

Pagetamil

‘நானும் இப்போது ஒரு குழந்தைக்கு தந்தை’: எதிர்க்கட்சி தலைவர் சஜித்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!