25.3 C
Jaffna
February 21, 2024
இலங்கை

மாம்பழம் விற்கும் யுவதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி

சீருடையில் மாம்பழம் வாங்க வந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ஏஎஸ்பி) மாம்பழம் மற்றும் விலைக் காட்சிப் பலகையால் தாக்கியதாக மாம்பழம் விற்கும் 21 வயதான பெண் ஒருவர் ஹன்வெல்ல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான மொனராகலை தொம்பகஹவெல அலெலந்தவை சேர்ந்த டி.உத்திக என்பவர் சிகிச்சைக்காக சாலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவிசாவளை கொழும்பு வீதியில் வனஹகொட பிரதேசத்தில் உள்ள பழக்கடை ஒன்றிற்கு மாம்பழம் கொள்வனவு செய்வதற்காக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வந்த போது, மாம்பழங்களின் விலை குறித்த விவாதம் முற்றியதையடுத்து உதவி பொலிஸ் அத்தியட்சகர் மாம்பழம் மற்றும் விலைக் காட்சிப் பலகையால் தன்னைத் தாக்கியதக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணைகளின் போது, சீதாவக்க பிரதேசத்தில் கடமையாற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகரினால் குறித்த வர்த்தகப் பெண் தாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஹங்வெல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ். பல்கலைக் கழக முகாமைத்துவ பீடத்தில் தொழில் வாய்ப்புச் சந்தை

Pagetamil

கரைச்சி பிரதேசசபைக்கு புதிய செயலாளர்

Pagetamil

தமிழ் அரசு கட்சிக்கு எதிரான வழக்குகளில் எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாக முடியாது; தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளும் விளையாட்டு: ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா!

Pagetamil

இராமநாதன் அரங்காற்றுகை மாணவர்கள் போராட்டம்

Pagetamil

யாழில் இந்திய துணைத்தூதரகத்தை முற்றுகையிட முயன்ற கடற்றொழிலாளர்கள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!