26.3 C
Jaffna
February 26, 2024
இலங்கை

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யக்கோரும் மனித உரிமைகள் பேரவை!

சர்ச்சைக்குரிய நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை மனித உரிமைக் கடமைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்யும் வகையில் திருத்தம் செய்வது குறித்து பரிசீலிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

“புதிய நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம், கருத்துச் சுதந்திரம் உட்பட மனித உரிமைகளுக்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்” என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எக்ஸ் (ருவிற்றர்) பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சிவில் சமூகம் மற்றும் தொழில் குழுக்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கும், மனித உரிமைகள் கடமைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் சட்டத்தில் திருத்தம் செய்வதை பரிசீலிக்குமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்” என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய விமர்சனங்களுக்கு உள்ளான இந்தச் சட்டம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் அங்கீகரிக்கப்பட்டதையடுத்து நேற்று சட்டமாக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் மரதன்

Pagetamil

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க- சமத்துவ கட்சி தலைவர் சந்திரகுமார் சந்திப்பு

Pagetamil

மார்ச் மாதம் முதல் இலங்கைக்குள்ளேயே சிறுபான்மையினராகும் இலங்கையர்!

Pagetamil

‘நானும் இப்போது ஒரு குழந்தைக்கு தந்தை’: எதிர்க்கட்சி தலைவர் சஜித்

Pagetamil

கொள்கலனில் மறைந்து வெளிநாடு செல்ல முயன்ற 2 தமிழர்களும் நாடு கடத்தப்பட்டனர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!