25.3 C
Jaffna
February 21, 2024
இலங்கை

சிறிதரன் எம்.பியை ரணிலிடம் அழைத்து சென்ற மனோ எம்.பி: சாந்தன் இலங்கை வர உதவுவதாக ரணில் உத்தரவாதம்!

இன்று சனிக்கிழமை நண்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் ஆகியோர், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைபெற்றுள்ள சாந்தனை இலங்கை வர அனுமதிக்குமாறு கோரினர்.

இக்கோரிக்கையை சாதகமாக பரிசீலித்து, சாந்தன் இலங்கை வந்து தன் வயதான தாயாரைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்புக்கான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரட்னாயக்கவுக்கு, சந்திப்பின் போதே ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

சாந்தனின் தாயாரின் கோரிக்கைக் கடிதம் மற்றும் மேலதிக தகவல்களை தருமாறும் ஜனாதிபதி இரண்டு எம்.பிக்களிடமும் கோரியுள்ளார்.

இந்த சந்திப்புக்கான ஏற்பாட்டை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ். பல்கலைக் கழக முகாமைத்துவ பீடத்தில் தொழில் வாய்ப்புச் சந்தை

Pagetamil

கரைச்சி பிரதேசசபைக்கு புதிய செயலாளர்

Pagetamil

தமிழ் அரசு கட்சிக்கு எதிரான வழக்குகளில் எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாக முடியாது; தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளும் விளையாட்டு: ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா!

Pagetamil

இராமநாதன் அரங்காற்றுகை மாணவர்கள் போராட்டம்

Pagetamil

யாழில் இந்திய துணைத்தூதரகத்தை முற்றுகையிட முயன்ற கடற்றொழிலாளர்கள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!