முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சாமரி பெரேராவை ஸ்ரீலங்கா பொதுஜனபெருமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் கட்சியினால் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாமல் ராஜபக்ச தலைமையிலான இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஏற்கனவே கலந்துரையாடலை நடத்தியது.
குறித்த பிரேரணை கட்சியின் மத்திய குழு மற்றும் செயற்குழுவில் இன்றும் நாளையும் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணைக்கு கட்சியின் உயர்மட்ட தலைமையின் ஆசியும் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை, பொதுத் தேர்தலில் போட்டியிட அழைப்பு விடுக்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என சட்டத்தரணி சாமரி பெரேரா அண்மையில் தெரிவித்திருந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1